பக்கம் எண் :

418

‘மறையென வறியார்’ என்றுபாடமோதுவாரும் உளர்.

(கு - ரை.) 1. ‘இனியென்றது, இனிநினைந்திரக்கமாகின்று என்றாற்போல இப்பொழுது என்னும்பொருள் தந்தது’ (கலித். 1, .) , ‘இரங்கல்’என்னும் உரிச்சொல் இரக்கமென்றாகி ஒரு பொருளதுகழிவாற் பிறந்த வருத்தமாகிய குறிப்புணர்த்திநிற்குமென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ.61, ந. 1 - 3.

புறநா. 11: 1 - 4.

9. "நெடுநீர்த் தண்கயந் துடுமெனப்பாய்ந்து” (நற். 330: 3)

‘நெடுநீர்க்குட்டத்துத் துடுமெனப்பாய்ந்து என்பதும் இசை’ (தொல். இடை. சூ. 10, ந.;நன். வி. சூ. 424) ; ‘துடும்’ என்னும் சொல் ஓசைப்பொருண்மேல் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ.420, மயிலை.

6 - 9. "கரைசேர் மருத மேறிப், பண்ணைபாய்வோள்” (ஐங்குறு. 74)

14. ‘’பெருமூ தாள ரேமஞ் சூழ” (முல்லை.54)

12 - 4. தொடித்தலை........எமக்கே: என்பதுதன்கட்டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது;என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்யமாட்டாதுஇளிவந்தனம் இக்காலத்து என்றமையின்’ (தொல்.மெய்ப்பாடு. சூ. 6, பேர்.; இ. வி. சூ. 578, உரை)

மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘கழிந்தோரொழிந்தோர்க்குக் காட்டியமுதுமை’என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ.24, .

(243)

244

பாணர் சென்னியும் வண்டுசென் றூதா
விறலியர் முன்கையுந் தொடியிற் பொலியா
இரவன் மாக்களு...............

(இ- ள்.) ......................முசுக்கலையின்நீக்குதற்கு இரலையென விசேடித்தனர்.....

...சாதலென்பது இன்னாதாதலிற்பெரும்பிறிதாயின்றோவென்றான்.

(கு - ரை.) 1. புறநா. 376: 9; ‘’கண்டோர்மருளும் வண்டுசூழ் நிலையும்” (பொருந. 97)

(244)

245

யாங்குப்பெரி தாயினு நோயள வெனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
5தொள்ளழற் பள்ளிப்பாயல் சேர்த்தி