7-9. ‘‘பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற்செல்வம், நயனுடையான்கட் படின்” (குறள், 216) மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து, தனிமகள்புலம்பிய முதுபாலை’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 24, ந. (254) 255 | ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே அணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்க வல்லேன் என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை இன்னா துற்ற வறனில் கூற்றே | | 5 | நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே. |
(பி - ம்.) 2 ‘உய்த்தனன்’, ‘எடுத்தனன்கொளினுய்த்தனென் கோனே மார்பெடுக்கல்லேன்’ 6‘சேரநடத்தி’ திணையும் துறையும் அவை. ............ வன்பரணர் பாடியது. (இ - ள்.) ஐயோவென்று அரற்றுவேனாயின்அவ்வுரைவழியே வந்து நின் உடம்பாயினும் யான் காணப்பெறாமல்ஏதஞ்செய்யுமோவென்று புலியை அஞ்சுவேன்; இவ்விடத்தினின்றும்எடுத்துக்கொண்டுபோவேனென்று நினைப்பின் நினதுஅகலிய மார்பை எடுக்கமாட்டேன்; என்னையொப்பப்பெரிய நடுக்கத்தை உறுவதாக, உன்னை இறந்துபடும்பரிசுவந்து தாக்கிய அறமில்லாத கூற்றே. யாம் மலையினதுநிழற்கண்ணே அடைவேமாக; எனது நிரைத்த வளையையுடையமுன்கையைப் பிடித்து மெல்ல நடப்பாயாக-எ-று. நடவாயென்னும் முன்னிலைவினைச்சொல்சின்னென்னும் இடைச் சொல்லான் அசைக்கப்பட்டுநின்றது. (கு -ரை.) 3. புறநா. 291: 5. 3-4. ‘என்போற் பெருவிதிர்ப்புறுக நின்னை, இன்னா துற்றவறனில் கூற்றே: என்புழிப்போலவென்பது குறிப்புவினையெச்சமாய் நின்றது’ (தொல்.எச்ச. சூ. 18, சே.) மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள்புலம்பிய முதுபாலைக்கும் (தொல். புறத்திணை. சூ.19, இளம்.) , இழவுபற்றி வந்த அழுகைக்கும் (தொல்.மெய்ப்பாடு. சூ. 5, இளம்.) , தன்கட்டோன்றியஇழவுபற்றிப் பிறந்த அவலச்சுவைக்கும் (தொல்.மெய்ப்பாடு. சூ. 5, பேர்.) மேற்கோள்; ‘ஐயோ.........சிறிதே:இதனுள் அழுகையாகிய மெய்ப்பாடு புலப்பட வந்தவாறுகாண்க’ (தொல். செய். சூ. 194, இளம்.) (255)
|