256 | கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய சிறுவெண் பல்லி போலத் தன்னொடு சுரம்பல வந்த வெமக்கு மருளி | | 5 | வியன்மல ரகன்பொழி லீமத் தாழி அகலி தாக வனைமோ நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே. |
திணையும் துறையும் அவை. ................................ (பி - ம்.) 3 ‘தம்மொடு’ திணையும் துறையும் அவை. -------------------------- (இ - ள்.) கலம் வனையும் வேட்கோவே!கலம் வனையும் வேட்கோவே! சகடஞ் செலுத்தும்உருளின்கண் ஆரத்தைப் பொருந்திவந்த சிறிய வெளியபல்லிபோல் நெருநலை நாளாற் பலசுரமும் தன்னோடுகழிந்துவந்த எமக்கும் அருள்பண்ணி (யாமும் அவனோடேகூடியிருக்கும் படி) பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக்காட்டின்கண் முதுமக்கட்டாழியை இடமுடைத்தாக வனைவாயாக,பெரிய இடத்தினை யுடைய பழைய ஊரின்கட் கலம் வனையும்வேட்கோவே!- எ - று. ‘எமக்கும்’ என்றது பன்மையும்தலைமையும் கருதாது மயங்கக் கூறி நின்றது. ‘கோவே! கோவே! மூதூர்க்கலஞ்செய்கோவே! எமக்கும்அருளி அகலிதாக வனைகவெனக்கூட்டுக. அடுக்கு, விரைவின்கண் வந்தது. (கு - ரை.) 1. கலம் - பாண்டம். மு.புறநா. 228: 1. 3-4 "பொருந்தலாற் பல்லிபோன்றும்” (சீவக. 1895) 5. புறநா. 228: 12, குறிப்புரை. (256) 257 | செருப்பிடைச் சிறுபர லன்னன் கணைக்கால் அவ்வயிற் றகன்ற மார்பிற் பைங்கட் குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்ச் செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லொ | | 5 | டியார்கொலோ வளியன் றானே தேரின் ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக் காடுகைக் கொண்டன்று மிலனே காலைப் புல்லா ரினநிரை செல்புற நோக்கிக் கையிற் சுட்டிப் பையெனவெண்ணிச் |
|