பக்கம் எண் :

434

மெய்யின்கண் ஏறிய புலைமகளையொப்பத் தாவித் துள்ளும் ஆனிரைமேல்; மருங்கிலே விளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக்கழலினையுமுடையோய்!-எ - று.

புனைகழலோய்! காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின் உள்ளம் சிறப்பதாகவெனக் கூட்டுக.

செல்லலென்றது அவரைக் கண்டு பொருது கொன்றன்றிச் செல்ல லென்பதாம்.

(கு - ரை.) மு. வெட்சித்திணைத்துறைகளுள், ‘ஆபெயர்த்துத் தருதல்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 5, இளம்; ந.

(259)

260

வளரத் தொடினும் வௌவுபு திரிந்து
விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத்
தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
உளருங் கூந்த னோக்கிக் களர
5கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்லென வினவினை வரூஉம்
பாண கேண்மதி யாணரது நிலையே
புரவத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந்
10தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டும்
கையுள போலுங் கடிதண் மையவே
முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தந் துடிபுணை யாக
15வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையெயிற் றுய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த வுரைய னாகி
20உரிகளை யரவ மானத் தானே
அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே
கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய விலக்கம் போல
அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே
25உயரிசை வெறுப்பத் தோன்றியபெயரே
மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி