பக்கம் எண் :

433

தலைச்சென்றென்பது, தலைச்செலவெனத்திரிக்கப்பட்டது. இதற்குக் கள்விலையாட்டியிடத்தேசெல்லவென்றுமாம்.
‘தீங்கட்டாரம்’ என்றோதிக் கள்ளாகிய இனியபண்டமெனினும் அமையும்.

‘காய்தலுமுண்டு’ என்பதற்குக்கள்வெய்யோனாகலின், நின்னை வெகுளவுங்கூடுமென்பாரும்உளர்.

இவன் நிரைகொள்ளச் செல்கின்றமைகண்டார் கள்விலையாட்டிக்குக் கூறியது.

(கு - ரை.) 3. புறநா. 177: 14.

6. ஏழாம்வேற்றுமை வினையோடுமுடியும்வழித் திரிந்ததற்கும் (தொல். தொகை.சூ. 15, இளம். ந.) , வேற்றுமைக்கண் மகரவொற்றுப்பகரம்வந்துழிக் கெடாது நின்றதற்கும் (தொல்.புள்ளிமயங்கு. சூ. 17, இளம். ந; இ. வி. சூ. 129,உரை) மேற்கோள்.

10. "கழுமிய துன்பமொடு கண்ணீருகுத்து” (மணி. 13: 18)

மு. ‘முட்காற் காரை......வெய்யோனே:இது வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது’ (தொல்.அகத்திணை. சூ. 54, ந.)

(258)

259

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்
செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம்
5முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கு மான்மேற்
புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே.

திணை - கரந்தை; துறை - செருமலைதல்: பிள்ளைப்பெயர்ச்சியுமாம்.

................கோடைபாடிய பெரும்பூதனார் பாடியது.

செருமலைதலாவது:-

‘’வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ

உட்குவரத் தாக்கி யுளர்செருப் புரிந்தன்று” (பு. வெ. 25)

(இ - ள்.) தாம் கொள்ளப்பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது தழையால் மூடிய பெரிய காட்டின்கண் தலைகரந்திருந்த வலிய வில்லையுடைய மறவரது ஒடுங்கிய நிலையைக் கருதாய்; போகாதொழி, போகாதொழி, நினது மேற்கோள் சிறப்பதாக, தெய்வம்