ஆறு வண்டு மேம்படூஉமென இடத்துநிகழ்பொருளின்தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. (கு - ரை.) 1 - 2. புறநா. 368: 14 - 5, 392: 4 - 5. 8. புறநா. 169: 4 - 5, குறிப்புரை. மு. கண்டோர் கையற்றுக் கூறியதற்கும், நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்தியதற்கும் மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 5, ந. (263) 264 | பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொ டணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினிநட் டனரே கல்லுங் கன்றொடு | | 5 | கறவை தந்து பகைவ ரோட்டிய நெடுந்தகை கழிந்தமை யறியா தின்றும் வருங்கொல் பாணரது கடும்பே. |
(பி - ம்.) 1 ‘சேர்த்து’ 6 - 7 ‘யறியா, நின்று மிவருங்கொல்’ திணையும் துறையும் அவை. ... ... ... உறையூர் இளம்பொன்வாணிகனார் (பி - ம். .............ன்சாத்தன் கொற்றனார்) பாடியது. (இ - ள்.) பருக்கைகளையுடைய இடத்துத்திட்டையை (பி - ம். பதுக்கைக் கல்லை) ச் சேர்த்தி ஆண்டுள்ள மரலைக்கீறித் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே அழகிய மயிலினது பீலியைச் சூட்டிப் பெயரை யெழுதி இப்பொழுது நட்டார், கல்லையும்; கன்றுடனே கறவையையும் மீட்டுக்கொண்டு வந்து மறவரை ஓட்டிநோக்கிய நெடுந்தகை பட்டமை யறியாது இன்றும் வருங்கொல்லோ பாணரது சுற்றம்?-எ - று. பட்டமையறிந்து வாராதொழியுமோ அறியாது வருமோ வென ஐயமாக்குக. பதுக்கை சேர்த்ததேயன்றிக் கல்லும் நட்டனரென உம்மை எஞ்சி நின்றது. (கு - ரை.) 2. ‘தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, திரங்குமரனாரிற் பொலியச் சூடி” (மலைபடு. 430 - 31) 3 - 4. புறநா. 260: 26 - 8; ‘’நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”; ‘’பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” (அகநா. 67: 8 - 10, 131: 10 - 11) மு. ‘’இனிப், பரலுடை மருங்கிற் பதுக்கையென்னும் புறப்பாட்டினுள், அணிமயில்.....கல்லும் எனக் கன்னாட்டுதல் பெரும்
|