படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின் நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டுநாட்டோர் முறைமையென்பது, சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க” (தொல். புறத்திணை. சூ. 5, ந.) (264) 265 | ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப் போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் | | 5 | கல்லா யினையே கடுமான் றோன்றல் வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க் கடும்பகட் டியானை வேந்தர் ஒடுங்கா வென்றியு நின்னொடு செலவே. |
திணையும் துறையும் அவை. .....................சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது. (இ - ள்.) ஊரை மிகவுங் கடந்த முரம்புநிலமாகிய முதிர்ந்த பறந் தலையிடத்து உயர்ந்த நிலையையுடைய வேங்கையினது ஒள்ளிய கொத்தாகிய நறிய பூவைப் பனையோலையால் அலங்கரித்துத் தொடுத்து................ (கு - ரை.) 2. வேங்கைப் பூமாலை: புறநா. 21: 9, 168: 15. மலர்களைப் பனந்தோட்டில் தொடுத்தல்: 'கொம்மைப் போந்தைக் குடுமிவெண்டோ, டத்த வேம்பி னமலை வான்பூச், சுரியா ருளைத்தலை பொலியச் சூடி” (குறுந். 281: 2 - 4) 4. படலை - தழைவிரவித் தொடுத்த மாலை. 7 - 9. பரிசிலர் செல்வமும் வேந்தர் வென்றியும் நின்னோடு செல்லக் கல்லாயினையே எனக் கூட்டுக. மு. ‘ஊர்நனி......செலவே: இது கோவலர்: படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது’ (தொல். புறத்திணை. சூ. 5, ந.) (265) 266 | பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக் கயங்களி முளியுங் கோடை யாயினும் புழற்கா லாம்ப லகலடை நீழற் கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை | | 5 | நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம் நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல் வான்றோய் நீள்குடை வயமான் சென்னி சான்றோ ரிருந்த வவையத் துற்றோன் |
|