| 5 | உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர் யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப் பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே னாக | | 10 | அகமலி யுவகையொ டணுகல் வேண்டிக் கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழ நல்கின னஞ்சி யானது பெயர்த்தனெ னாகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் | | 15 | பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண் டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும் துன்னரும் பரிசி றருமென என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே. |
(பி - ம்.) 1 'சீந்தியுலாநிவாநத' 2 'ஒலிகதிர்க்கழனி' 3 'குடவன்' 4 'வளளயிழுதல', 'வளளினியெனாதல' 5 'உள்ளமோம்புமின்' 14 'வுணரமை' 15 'பகறகொண்டு', 'பதற்கொண்டு' திணையும் துறையும் அவை. கடைநிலையாயினவெல்லாம் பாடாண்டிணை. சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் 1கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார். (கு - ரை.) 1. வில் உலாவி நிமிர்ந்த மார்பு ; "சிலையுலாய் நிமிர்ந்த மார்பன்" (சீவக. 2976) 3. வலிதுஞ்சு தடக்கை - வன்மை நிலைபெற்ற பெரிய கையையுடைய. வாய்வாள் - குறிதப்பாத வாள். தடவென்னும் உரிச்சொல் பெருமையை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 24, சே.; உரி. 22, ந.; இ. வி.சூ. 284, உரை. 4. வள்ளியனாதல் - பெருங்கொடையை உடையானாதலை. 5. உள்ளலோம்புமின் - நினைத்தலைத் தவிர்மின். 16.வைகறையில்.
1. புதுக்கோட்டைக்குத் தெற்கே கோனாட்டில் எறிச்சியென்று பழையதோர் ஊர் உள்ளது; அதிற் பஞ்ச பாண்டவர் சுனைகளென்று ஐந்து சுனைகளும் ஒரு சிவஸ்தலமும் உள்ளன. இங்கே எறிச்சிலூரென்று அவ்வூரென்று கருதப்படுகின்றது.
|