7. "ஒருகண் மாக்கிணை யொற்றுபு" (புறநா. 392 : 5) 8. பாடு - ஒலி. தந்தை - பாட்டுடைத் தலைவன் தந்தை. 9. வஞ்சி - பகைமேற் செல்லுதலை. 11 - 2. "இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர், பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர், தேற்றா வீகையு முளதுகொல்" (புறநா. 140 : 7-9) 13. பெயர்த்தனெனாக - பெயர்க்க. 15. அதற்கொண்டு - அதனால். 16. "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற" (புறநா. 390 : 20) மு. புறநா. 140. இப்பாட்டினைப் பொருநராற்றுப்படைக்கு மேற்கோளாகக் காட்டினர் ; தொல். புறத்திணை. சூ. 30, இளம்.; சூ 36, ந. இப்பாட்டு, புகழாப்புகழ்ச்சியென்னும் அணியின்பாற்படும். (394) 395 | மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டுக் குறுமுயலின் குழைச்சூட்டொடு நெடுவாளைப் பல்லுவியற் | | 5 | பழஞ்சோற்றுப் புகவருந்திப் புதற்றளவின் பூச்சூடி ............................................................ ...................................அரியலாருந்து மனைக்கோழிப் பைம்பயிரினனே | | 10 | கானக்கோழிக் கவர்குரலொடு நீர்க்கோழிக் கூய்ப்பெயர்க் குந்து வேயன்ன மென்றோளால் மயிலன்ன மென்சாயலார் கிளிகடியினனே | | 15 | அகலள்ளற் புள்ளிரீஇயுந்து யாங்கப், பலநல்ல புலனணியும் சீர்சான்ற விழுச்சிறப்பிற் சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது | | 20 | நெடுங்கைவேண்மா னருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச்சாத்தன் கிளையேம் பெரும |
|