பக்கம் எண் :

593

பிடவூரும் அழுந்தூரும்.....முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம்" (தொல். அகத்திணை. சூ. 30, .)

22. நண்பகல் - நடுப்பகல். 23. மாலை - மாலைக்காலத்தில்.

27. சிறிதும் - சிறிது நேரமும்.

34 - 5. எரி, குளமீன், தாள் என்பன வான்மீன் விசேடங்கள். இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலகவறுமைக்கு ஏதுக்கள்.

36. செய் - தொழில் ; "பெருஞ்செய் நெல்லின் முகவைப் பாட்டும்" (சிலப். 10 : 137 ; நன். சூ. 289, மயிலை. மேற்.) கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) ; நற். 258 : 6.

(395)

396

கீழ்நீரான் மீன்வழங்குந்து
மீநீராற் கண்ணன்ன மலர்பூக்குந்து
கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து
5நெடுநீர்கூஉ மணற்றண்கான்
மென்பறையாற் புள்ளிரியுந்து
நனைக்கள்ளின் மனைக்கோசர்
தீந்தேற னறவுமகிழ்ந்து
தீங்குரவைக் கொளைத்தாங்குந்து
10உள்ளிலோர்க்கு வலியாகுவன்
கேளிலோர்க்குக் கேளாகுவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற் றெழினி யாதன்
கிணையேம் பெரும
15கொழுந்தடிய சூடென்கோ
வளநனையின் மட்டென்கோ
குறுமுயலி னிணம்பெய்தந்த
நறுநெய்ய சோறென்கோ
திறந்துமறந்து கூட்டுமுதல்
20முகந்துகொள்ளு முணவென்கோ
அன்னவை பலபல.................
..................ருநதய
இரும்பே ரொக்க லிருஞசெஞசிய
அழித்துவப்ப வீத்தோனெந்தை