| 25 | எம்மோ ராக்கக் கங்குண்டே மாரிவானத்து மீனாப்பண் விரிகதிர வெண்டிங்களின் விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை யாமும் பிறரும் வாழ்த்த நாளும் | | 30 | நிரைசா னன்கல னல்கி உரைசெலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே. |
(பி - ம்.) 2 ‘மலர்ப்பூஙகுநது' 5 ‘உண்டுநீர்கூறுமணற்' 6 ‘புள்ளிரிவுந்து' 12 - 6 ‘கழுமியவௌவெலியிலவளநீகிர வாடடெறறெழுனியாகென கிணைவெமபெறாயகழுமியவௌளையி' 17 ‘னிணமபெயதநதுறு' 19 ‘மறந்த' 23 ‘ரொககெல' 25 ‘ராககககஙகணடெ', ‘ராககககயங குணடே' 26 ‘மீனாலபபண' திணையும் துறையும் அவை. வாட்டாற்றெழினியாதனை மாங்குடிகிழார். (கு - ரை.) 1. வழங்குந்து - செல்லாநிற்கும். 2. மேனீரில் கருங்குவளைமலர் பூக்கும். 4. அரிப்பறை - ஒருவகைப்பறை ; அரித்தெழும் ஓசையையுடையது ; 'அரிப்பறை வினைஞர்' ('ஐங்குறு.81) ; 'அரிக்கூட் டின்னியம் கறங்க வாடுமகள்' (குறிஞ்சிப். 193) ; ' அரிப்பறை யனுங்க வார்க்கும் மேகலை', 'அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே' (சீவக.2082, 2688) 6. மென்பறை - மெல்லிதாகப் பறத்தலையுடைய குஞ்சு ; 'வெண்டலைக் குருகின் மென்பறை விளிக்குரல்' (ஐங்குறு.86) 7. கோசர் - ஒருவகை வீரர் ; பதிற். 12 : 18. 8. கள்ளின் தெளிவை உண்டு. 10. உள் - ஊக்கம்.13. வாட்டாறு - ஓரூர். 15. கொழுந்தடிய சூடு - கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சி. 19. கூடு - நெல் முதலிய தானியங்கள் வைத்துள்ள சேர். 24. உவப்ப அழித்து ஈத்தோன் - மகிழும்படி மீட்டுங் கொடுத்தோன் ;'அழித்துப் பிறந்தனெ னாகி' (புறநா.383 : 16) 25. கங்கு - எல்லை.27. திங்களின் - சந்திரனைப்போல. 27 - 8. புகழுக்குத் திங்களுவமை. 31. உரை செல - புகழ்பரக்க. (396)
|