பாடல்களுட் சிறந்த பகுதிகள். இவராற் பாடப்பட்டோரும் இவர் காலத்தவரும் : சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், சிறுகுடிகிழான் பண்ணனென்போரும் அவர்களைப்பாடிய புலவர்களும் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள்-18. குறுந். 1; திருவள். 1; நற். 1; புறநா. 15. கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் :-வஞ்சப் புகழ்ச்சியணி இவர் பாடல்களில் நன்றாக அமைந்துள்ளது; திருவள்ளுவ மாலையில் இவர் பெயரோடு ஒருபாடல் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோர் : சேரமான் குட்டுவன்கோதை : சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்தூர்கிழான் தோயன் மாறன், சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழிய ஏனாதி திருக்குட்டுவனென்போர். சங்கவருண ரென்னும் நாகரியர் :-இவர்பாடிய பெருங்காஞ்சித் துறை இனியபொருள் வாய்ந்தது. இவர்பாடல் யாக்கைநிலையாமை முதலியவற்றை வற்புறுத்திக் கூறும்; இவராற் பாடப்பட்டோன் தந்து மாறன். சாத்தந்தையார் :-இவர், பதினெண்கீழ்க்கணக்கினுளொன்றாகிய திணைமொழியைம்பது என்னும் நூலாசிரியரான கண்ணஞ்சேந்தனாருடைய தந்தையார். மற்போரியல்பு இவர் பா4டலிற் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோன் சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி. சிறுவெண்டேரையார் :-ஐயாதிச் சிறுவெண்டேரையாரென்றும் இவர் பெயர் காணப்படுகின்றது. சேரமான் கணைக்காலிரும்பொறை :-இவன் சோழன் செங்கணானொடு போர்செய்து பிடிக்கப்பட்டுக் குடவாயிற்கோட்டச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று கேட்டு உடனே பெறாது பின்பு பெற்று அதனை மானத்தால் உண்ணாது கைக்கொண்டிருந்து, “குழவியிறப்பினும்’ என்னும் பாடலைப் பாடித் தன்கருத்தைப் புலப்படுத்தி அப்பால் துஞ்சினான். சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை :-இவன், தன் மனைவி யிறந்தபொழுது பிரிவாற்றாது, “யாங்குப்பெரி தாயினும்” என்னும் பாடலைப் பாடினான். சோணாட்டுமுகையலூர்ச் சிறுகருந்தும்பியார் :-முகையலுார்ச் சிறு கருந்தும்பியாரென்றும் பிரதிபேதமுண்டு. திருவள்ளுவமாலையில் 17-ஆம் செய்யுளாகிய, “உள்ளுத லுள்ளி’ என்னும் வெண்பா இவரால் இயற்றப்பெற்றது. இவராற் பாடப்பட்டோன் வல்லார்கிழான் பண்ணன். சோழன்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் :-தன்னாட்டில் வேளாண்மைத் தொழிலிற் சிறந்து விளங்கிய பண்ணனென்பவனுடைய அரிய குணங்களை இவன் பாராட்டிப் பாடினன். இவனது மற்ற வரலாற்றைப் பாடப்பட்ே்டார் பெயர் வரிசையிற்காண்க.
|