பக்கம் எண் :

668

‘இவளை அங்கீகரித்துக்கொள்க’ என்று கபிலர் முதலிய புலவர்களால் இரந்து பாடப்பெற்றான்; “கண்ணகிகாரணமாக வையாவிக்கோப்பெரும் பேகனைப் பரணர்பாடிய கைக்கிளைவகைப் பாடாண்பாட்டு” (தொல். புறத்திணை. சூ. 35, .) “கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய, அருந்திறலணங்கிய னாவியர் பெருமகன், பெருங்க னாடன் பேகனும்” (85 - 7) என்றார் சிறுபாணாற்றுப்படையிலும். இவன் பெயர் பேகனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார,் பெருங்குன்றூர்கிழார்.