பக்கம் எண் :

670

விசேடச் செய்திகள்

அளவுகள்:- உறை, நாழி, மா, வேலி.

ஆபரணவகை:- அருங்கலம், அருங்கலவெறுக்கை, ஐம்படைத்தாலி, கம்பியாகச் செய்த நூல், கிண்கிணி, குறுவளை, தாலி, தொடி, நெற்றிப்பட்டம், புலிப்பற்றாலி, பொலங்கலம், பொலங்காசு, பொலந்தாமரை, பொற்கம்பி, பொற்றளிர், பொற்றும்பை, பொன்னுழிஞை, மங்கலியசூத்திரம், முத்தாரம், முத்துவடம், முன்கைக் கடகம், யானையின் நெற்றிப்பட்டம், வள்ளித்தொடி, வளை, வளைந்தகடகம், வீரக்கழல் (வீரகண்டை) , வீரவளை.

ஆயுதவகை:- அடார், அம்பறாத்தூணி, அம்பு, அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடிதைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப்பலகை, காழெஃகம், கிளிகடிகருவி (தட்டை) , குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலையெஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேல், வேலுறை.

ஆறுகள்:- ஆன்பொருநை (பொருநை) , கங்கை, காரியாறு, காவிரி, குமரி, பஃறுளி, பெண்ணை, வையை.

இடவகை:- அம்பலம், அரண்மனை, அரைமண் இஞ்சி, அரைமலை, அறச்சபை, ஆயுதக்கொட்டில், ஆலை, ஆற்றிடைக்குறை, ஆற்றின் கூடல், இடைகழி, இடைமதில், இளமரச்சோலை, இறைப்புரிசை, ஊர்ப்பொது, ஊருண்மரம், எயில், கட்டூர், கடைமடை, கடைமுகம், கரம்பை (பாழ்நிலம்) , கருப்பம்பாத்தி, கருப்பாலை, கல்லணை, கல்வளை, கலிங்கு, கவர்த்தவழி, கழனி, கள்ளிற்கடை, காட்டுவழி, காட்டுவாயில், காலை ஓலக்கம், காவற்காடு, குகை, குடம்பை, குதிரைப்பந்தி, குறியஅரண், குறுநெறி, கூடகாரம், கூற்றம், கொற்றுறைக்குற்றில், கோட்டம்பலம், கோடுயரடுப்பு, சதுக்கம், சபை, சித்திரமாடம், சில்குடிச்சீறூர், சிற்றரண், சிற்றூர், சிறுமனை, சுடலை, செண்டுவெளி, சேக்கை, சேனைகளின் வரவைப் பார்த்துக்கொண்டு இருத்தற்குரிய இருப்பு, தாதெருமறுகு, திண்ணை, தெரு, நாளோலக்கம், நெற்கதிர் வேய்ந்தவீடு, நெற்களம், பசுத்தொழு, படைக்கலக்கொட்டில், படைவீடு, பணிக்களரி, பாண்சேரி, பாத்தி, பாழூர், பீலிவேய்ந்த குடம்பை, புக்கில், புல்லால் வேய்ந்த சிறுமனை, புலிபொறித்த கோட்டை, புற்று, புறங்காடு, புன்செய், புனம், பூஞ்சோலை, பெருங்குறும்பு, பொதியில் (அம்பலம்) , மணற்குன்று, மதில், மதிற்சூட்டு, மலைநாடு, மலைவழி, மாடம், முரம்பு நிலம், முல்லை நிலம், முற்றம், முன்னூர்ப்பொதியில், யாகசாலை, யானைக்கூடம், வயல், வழி, வன்புலம், வாய்த்தலை, வாயில், விடுநிலம், வீட்டின் இறப்பு, வீடு, வீதி, வேண்மாடம், வேத்தவை, வேலி.

உடைவகை:- கலிங்கம், காழகஆடை, சிதார், சீரை, தழைகளாலாகிய ஆடை, தழைகளாலும் பூக்களாலுமாகிய உடை, பழந்துணி, புதுக்காழ்ப் போர்வை, புதுமடி, பூவடிவமைந்த ஆடை.