உணவுவகை:- அரிசி, அல்குபதம், அல்லியரிசி, அவல், அவிப் புழுக்கல், அவிழ், ஆட்டிறைச்சி, ஆமைப்புழுக்கு, ஆமை யிறைச்சி, ஆரன்மீன்சூட்டிறைச்சி, இல்லடு கள், இலைக்கறி, இளநீர், உப்பிலாப் புழுக்கல், உலை, ஊன்சோறு, ,ஊன்றடி, ஊன்றுவை, கட்கலங்கல், கடுங்கள், கந்தாரம், கருனை, கள், களிகொள்சோறு, காடி, குய்யுடையடிசில், கூழ், சுட்டபனங்கிழங்கு, சுடுகிழங்கு, சோற்றுத்திரளை, துவை, நறுநெய், நனைக்கள், நிணப்புழுக்கு, நிணமுரி, நெய், நெய்ம்மிதி கவளம், நெற்கவளம், பழஞ்சோறு, பனநுகும்பு, பனம்பிசிர், பாகு, பாசவல், பாலுலையில் வெந்ததும் தேனோடு கலந்ததுமான வரகரிசிச் சோறு, புல்லரிசி, புளிங்கறி, புளிங்கூழ், புளிமிதவை, புற்கை, பெருஞ் சோறு, பொரியல், மரையான்பாலுலையில் வெந்த சோறு, மான்வறைக் கருனை, மான்றசைப்புழுக்கல், மானிறைச்சி, முயலின் சூட்டிறைச்சி, முயலின் நிணம், மோர், வரகின்சோறு, வராலிறைச்சி, வறை, விழுக்கு, விழுக்குநிணம், வீரபானம், வெந்தை, வேளையிலை வேவை (வேளைவெந்தை) . உலகவகை:- கீழுலகம், கோலோகம், சுவர்க்கம், நரகம், வீர சுவர்க்கம். உலோகவகை:- இரும்பு, செம்பு, பொன், வெள்ளி. உவமைகள்:- அரசனுக்கு உயிர், அருவிக்குத் துகில், அருளுக்கு நீர், அழகிய இடத்திற்கு ஓவம், அழித்தற்குத் தீ, உபகாரியாகிய ஒருவனுக்கு அருஞ்சுரத்தின் மரம், உசாவினது அகலத்திற்கு ஆகாயம், எருமைக்குக் குண்டுக்கல், எருமைக்கொம்பிற்குப் பயற்றுநெற்று, கந்தைத் துணிக்குப் பாசிவேர், கள்மயக்கத்திற்குத் தேளின் கடுப்பு, கலிங்கவுடைக்குப் பாம்பின் தோல், கிணைப்பறைக்குக் களிற்றின் அடி, குடுமிக்கு மானுளை, குதிரைவேகத்திற்குக் காற்றின் வேகம், சாயலுக்கு நீர், செந்நெலுக்கு வேங்கைப்பூ, சேவற்கோழியின் நெற்றிச்சூட்டிற்கு முள்ளுமுருங்கைப்பூ, சேனைக்குக் கடல், தடாரிப்பறைக்குத் திங்களும் யானைக் காற்சுவடும், தமிழ் நாட்டரசர் மூவர்க்கு முத்தீ, தலைவனுக்குச் சூரியன், நண்பர்க்குக் கண், நரைக்கூந்தற்குக் கொக்கின் தூவி, நிணத்திற்கு நெய்விழுதும் மெழுகடையும், நிமிர்ந்த அவிழுக்குக் கொக்கின் நகம், நிரைக்கு விண்மீன், பகைவர் சேனையைத் தடுத்து நிற்கும் வீரனுக்குக் கடலைத் தடுத்து நிற்கும் கரை, பலவகைப் பூக்களாலாகிய மாலைக்கு இந்திரவில், பன்றித்தலைக்கு உரல், பனையினடிக்கு முழா, பாசறைக்குக் கடல், புகழுக்குத் திங்கள், புகைக்கு இருளும் மங்குலும், புதல்வர் தலைக்கு முனிவர்தலை, பொறுமைக்கு நிலம், மகளிர் நடைக்கு மயில்நடை, மணிக்கு முழவு, மதுவைப் பிழிந்தகோதுக்கு யானையுண்ட கவளக்கோது, மதுவிற்கு ஆனெய், முத்தாரத்திற்குப் பிறை முயல்விழிக்கு நீர்க்கொப்புள், மேகத்தோற்றத்திற்கு மலை, யானைச்செவிக்கு முறம், யானைத்தாளுக்குப் பணை, வண்மைக்கு மாரி, வலிக்குக் காற்று, வறுமைக்கு அரா, வறுமைத்துன்பத்திற்கு நரகத்துன்பம், வீட்டிற்குக் கயம் (நீர்நிலை) , வெள்ளைக்கூந்தலுக்கு விரித்தநூல், வேலுக்குக் கெண்டை, வேள்வித்தீக்குத் தாமரை.
|