சிறுதெய்வங்கள்:- கள்ளிநீழற் கடவுள், கூளி, நடுகற்றெய்வம், பேய், பேய்ப்பெண்டிர், பேய்மகள், பேயாயம். தானியங்கள்:- அவரை, உழுந்து எள், கடலை, குளநெல், கொள், செந்நெல், தினை, நெல், பயறு, மலைநெல், மூங்கில்நெல், வரகு, வெண்சிறுகடுகு, வெண்ணெல், வெள்ளெள், வெள்ளைவரகு. துவசவகை:- இடபக்கொடி, கருடக்கொடி, துகிற்கொடி, நாட்கொடி, பனைக்கொடி, புலிக்கொடி, மயிற்கொடி, மீனக்கொடி, விசயக்கொடி (வெண்கொடி) தெய்வவகை:- அருந்ததி, இந்திரன், இயக்கன், இராமன், உலக பாலர், கண்ணபிரான், காலன், சிவன், ஞாயிறு, திருமகள், திருமால், தூமக்கோள், பலராமர், பிதிரர், பிரமதேவர், முருகக்கடவுள், யமன், விண்மீன்கள். தொகைகள்:- அங்கம் - 4; அங்கம் - 6; அந்தணர் தொழில் - 6; அரசர்மூவர்; இலாஞ்சனை - 7; உணா - 4; உலகம் - 3; உழவர் உழாமலுளவாகும் பயன் - 4; ஊர் - 300; எச்சம் - 8; எயில் - 7; ஐம்படைத் தாலி; கடல் - 7; கணம் - 18; கழல் - 2; காட்டுப்பசு - 7; குடிகள் - 4; திசை - 4; திதி - 15; தீ - 3; துரியோதனாதியர் - 100; நாட்டுப்பசு - 7; நீர் - 3; பாடற்றுறை - 21; பாண்டவர் ஐவர்; பூக்கள் - 4, பூதம் - 5, பெருவேளிர் ஐவர்; பொறி - 5; மருந்து - 2; முரசு - 3; மூர்த்திகள் - 3; வருணம் - 4; வள்ளல்கள் - 7; வேதம் - 4; வேள்வி - 21. நாடுகள்:- காட்டுநாடு, காரிநாடு, கொங்குநாடு, கோனாடு, சோணாடு, பறம்புநாடு, பெண்ணைநாடு, மலைநாடு, மாறோக்கம், முக்காவனாடு, வேங்கடநாடு. நார்வகை:- ஆத்திநார், நறைக்கொடிநார், மரல்நார். நீர் நிலைவகை:- அருவி, ஆறு, உவர்க்கூவல், ஊருண்கேணி, கடல், கயம், களர்நிலக்கிணறு, கற்கூவல், காட்டாறு, சிற்றாறு, சுனை, நிறைக்குளம், பொய்கை, மடு, வல்லுவர்க்கூவல். நீர்மிதவை:- அம்பி (ஓடம்) , அறத்துறையம்பி, கப்பல், கழித்தோணி, தெப்பம், தோணி, நாவாய், மீன்படகு. நீர்வாழ்வன:- அயிரைமீன், ஆமை, ஆரன்மீன், இறாமீன், கயல், கவடி, கெடிற்றுமீன், கொழுமீன், கோட்டுமீன், சங்கு, சிப்பி, சிறுசின்மீன், சுறாமீன், நத்தை, நந்தினேற்றை, நீர்க்கோழி, நீர்நாய், நுழை மீன், மலங்குமீன், முதலை, வரால், வாளை. நூல்கள்:- அங்கங்கள், அருத்தநூல், தருமநூல், வேதங்கள். நோய்கள்:- நினைவாலுண்டாகும் நோய், பஞ்சி களையாப் புண,் புண்வழலை, மிடற்றுப் பசும்புண், வயாநோய்.
|