பக்கம் எண் :

674

பண்கள்:- இரங்கற்பண், காஞ்சிப்பண், குறிஞ்சிப்பண், செவ்வழிப்பண், படுமலைப்பண், மருதப்பண், விளரிப்பண்.

பந்தர்:- கூவையிலைப்பந்தர், தழைப்பந்தர், படஞ்செய் பந்தர்.

பரிசில்:- ஊர்ப்பரிசில், ஓடைப்பரிசில், யானைப்பரிசில் முதலியன.

பலி:- குருதிப்பலி, நாட்பலி.

பழமொழி:- கிளியீடுவாய்த்தாற்போல்வது, கொண்டைமேற் காற்றடிக்கச் செல்லல்.

பழவகை:- ஆலம்பழம், களங்கனி, துடரிப்பழம், நெல்லிக்கனி, பலாக்கனி, பனம்பழம், மாங்கனி, விளாங்கனி.

பறவைவகை:- அன்னப்பறவை, ஆந்தை, இதல், ஈசல் (செம்புற்றீயல்) , கழுகு (கழகின்சேவல்) , காக்கை, காட்டுக்கோழி, கானக்காக்கை, கிளி, குயில், குருவி, குறும்பூழ், கொக்கு, கோட்டான், செவ்வரி நாரை, தும்பி, தூக்கணங்குருவி, தேனீ, நாரை, பருந்து, புதா, புறவு, பூழ், பேராந்தை, பொகுவல், மயில், மனைக்கோழி, மிஞிறு, வானம்பாடி.

பாத்திரங்கள்:- உண்கலம், கட்குடம், கருங்கலன், கவிக்குந்தாழி, கிண்ணி, குடம், குடை (உண்கலம்) , குண்டிகை, கோய், சமைக்கும் பானை, சாடி, சேறுபட்ட தசும்பு, தாலம், தாழி, பனங்குடை, பாற்பானை, பானை, பொற்கலம், மண்டை, மதுக்குடம், மிடா, முதுமக்கட்டாழி, வட்டி, வெண்மண்டை, வெள்ளிக்கலம்.

பால்வகை:- கவரிமாவின் பால், பசுப்பால், மரையாவின்பால்.

பாவைவகை:- அல்லிப்பாவை, கண்மணிப்பாவை, கொல்லிப்பாவை, தெற்றிப்பாவை, மணற்பாவை, வண்டற்பாவை.

பின்வருவனவற்றை முன் அறிவிப்பவை:- உற்பாதம், தீயகனா, பழம்புள் போதல், பறவை நிமித்தம், புதுப்புள்வருதல், விண்வீழ் கொள்ளி.

புகைவகை:- சூளைப்புகை, துகிற்புகை, நறைப்புகை, நாடுசுடுபுகை, மீன்சுடுபுகை, யாகப்புகை.

புளிவகை:- களாப்பழப்புள்ளி, துடரிப்பழப்புளி, நாவற்பழப்புளி, நெல்லிப்பழப்புளி, புளியம்பழப்புளி, மாங்கனிப்புளி.

பொருள்களின் இயற்கை:- இடி வெள்ளை நிறத்தது, நிலத்திற்கு நீர் முந்தியது, புலி இடப்பக்கத்தில் வீழ்ந்ததை உண்ணாது, பூமிக்குக் கீழே நீர்நிலையுண்டு, மலையில் ஆவியுண்டாகும், மழைநீர்த் துளி கடலில் வீழ்ந்து முத்தாகும், யானை தன்மேலே ஒருவனெறிந்த கல்லைக்கவுளில் அடக்கிவைத்திருந்து பின்னர்க் காணும்பொழுது அதனையெறிந்து அவனைக் கொல்லும், யானைப்போர்க்கு வேற்படை உரித்து, யானைமதம் மணமுடையது, யானையிறைச்சியைப் புலி விரும்பும், விளக்கொளியில் மான் துயிலும்.

மணிகள்:- அரவீன்ற மணி, சிப்பிமுத்து, தென்கடன் முத்து, நீலமணி, பவழம், மலைபயந்த மணி, மாணிக்கம், யானைக்கொம்பின் முத்தம்.