| 53. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை மாந்தரன் என்பது இச் சேரமானது இயற்பெயர். இவன் இரும்பொறைக் குடியினனாதலால், இவ்வாறு கூறப்படுகின்றான். நிறையருந்தானை வெல் போர் மாந்தரம் பொறையன் (அகம்.142) என மாந்தரர் சான்றோரால் குறிக்கப்படுவது காணலாம். இவன் கபிலராற் சிறப்பிக்கப்பட்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் முதலியசேரமன்னர் கட்குக் காலத்தாற் பிற்பட்டவன். கபிலர் முதலிய நல்லிசைப் புலவர் பாட்டுகளிற் பேரீடுபா டுடையவன். ஒருகாலத்தே இவற்கும் இராய சூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் உண்டாயிற்று. தேர்வண்மலைய னென்பான் சோழற்குத் துணைவனாய் வந்து, இவனை வேறற்கு உதவினான். அக்காலத்தே, இச் சேரமான் தன்னைத் தொலைவித்த தேர்வண் மலையனது போராண்மையை வியந்து, வல்வேல் மலையனல்ல னாயின், நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கென நினைந்தானென வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடுகின்றார். இச்சேரமான் ஆட்சிக்குட்பட்ட விளங்கில் என்னும் ஊரைப் பகைவர் முற்றுகை யிட்டு வருத்த முறுவித்தாராக, இவன் யானைப்படையும் குதிரைப்படையும் சிறப்புறக் கொண்டு சென்று பகைவரை வெருட்டி விளங்கிலரை உய்வித்தனன். இச்சிறப்பு நிகழ்ச்சி இப் பாட்டின்கண் குறிக்கப்படுகிறது.
கிடங்கில், விளங்கில் என்பன போலப் பொருந்தில் என்பது ஓர் ஊர். இளங்கீரன் என்பது இப் புலவரது பெயர். இதனால் இவர் பொருந்தி விளங்கீரனார் எனப்படுகின்றார். இவர், அழகிய பாட்டுக்களைப் பாடும் நலஞ் சிறந்தவர். பொருள்வயிற் பிரிந்தேகும் ஒரு தலை மகன் நெஞ்சினை அவன் தன் மனைவிபாற் சென்ற காதல் தடுப்ப, அவன் அதனைத் தெருட்டிச் சென்றதும், சென்றவன் வினை முடித்துப் பொருள் நிரம்பக் கொண்டு வருங்கால், அக்காத லுணர்வு தோன்றி, அவன் காதலியை நினைப்பிக்க, குறைவினை முடித்த நிறைவின்னியக்கம் எனத் தான் திரும்பி வரும் வருகையைப் புகழ்ந்து பேசியதும், தலைவி அவன் வரவு குறித்து ஆழி யிழைத்திருப்பதும் அவன் வரவினை அவள் நினைக்குந்தோறும் பல்லியிசைப்பதும், பிறவும் இவரால் அழகொழுகப் பாடப்படுகின்றன. இவர், இச்சேரமான் திருமுன் சென்று பாடியவழி, அவன், செறுத்த செய்யுள் செய்யும் சிறப்புடைய கபிலன் இன்று உளனாயின் நன்று எனச் செய்யுளின்பச் சொல்லாட்டிடை விதந்து கூறினன். அந்நிலையில் இவர் இப் பாட்டினைப் பாடியுள்ளார்.
| முதிர்வா ரிப்பி முத்த வார்மணற் கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத் திலங்குவளை மகளிர் தெற்றி யாடும் விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற | 5. | களங்கொள் யானைக் கடுமான் பொறைய | | விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும் மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை கைம்முற் றலநின் புகழே யென்றும் |
|