பக்கம் எண் :

147

பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
20. ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
25.நின்று நிலைஇய ருலகமோ டுடனே. (56)

     திணை: அது. துறை: பூவைநிலை. அவனை மதுரைக்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

     உரை: ஏற்று வலன் உயரிய - ஆனேற்றை வெற்றியாக
உயர்த்த; எரி மருள் அவிர் சடை - அழல் போலும் விளங்கிய

சடையினையும்; மாற்றருங் கணிச்சி மணி மிடற்றோனும் -
விலக்குதற்கரிய மழுப்படையையுமுடைய நீலமணிபோலும்
திருமிடற்றை யுடையோனும்; கடல் வளர் புரி வளை புரையும் மேனி
- கடற் கண்ணே வளரும் புரிந்த சங்கை யொக்கும் திரு
நிறத்தையுடைய; அடர் வெம் நாஞ்சிற் பனைக் கொடி யோனும் -
கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையு
முடையோனும்; மண்ணுறு திரு மணி புரையும் மேனி - கழுவப்பட்ட
அழகிய நீலமணி போலும் திரு மேனியையும்; விண் உயர் புட்கொடி
விறல் வெய்யோனும் - வானுற வோங்கிய கருடக்கொடியையுமுடைய
வென்றியை விரும்புவோனும்; மணி மயில் உயரிய - நீலமணிபோலும்
நிறத்தையுடைய மயிற்கொடியை யெடுத்த; மாறா வென்றி - மாறாத
வெற்றியையுடைய; பிணி முக வூர்தி ஒண் செய்யோனும் என - அம்
மயிலாகிய வூர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று
சொல்லப்பட்ட; ஞாலம் காக்கும் கால முன்பின் - உலகம் காக்கும்
முடிவு காலத்தைச் செய்யும் வலியினையும்; தோலா நல்லிசை நால்வ
ருள்ளும் - தோல்வியில்லாத நல்ல புகழினையுமுடைய நால்வ
ருள்ளும்; மாற்றரும் சீற்றம் - விலக்குதற்கரிய வெகுட்சியால்; கூற்று
ஒத்தீ - கூற்றத்தை யொப்பை; வலி வாலியோனை ஒத்தீ - வலியால்
வாலியோனை யொப்பை; புகழ் இகழுநர் அடுநனை ஒத்தீ - புகழால்
பகைவரைக் கொல்லும் மாயோனை யொப்பை; முன்னியது
முடித்தலின் முருகு ஒத்தீ - கருதியது முடித்தலான் முருகனை
யொப்பை; ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் - அப்படி யப்படி
அவரவரை யொத்தலான்; யாங்கும் அரியவும் உளவோ நினக்கு -
எவ்விடத்தும் அரியனவும் உளவோ நினக்கு; அதனால் - ஆதலால்;
இரவலர்க் கருங்கலம் அருகா தீயா - இரப்போர்க்கும் பெறுதற்கரிய
அணிகலங்களைப் பெரிதும் வழங்கி; யவனர் நன்கலம் தந்த தண்
கமழ்