| | சோழநன் னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ | 10. | வாயில் விடாது கோயில் புக்கெம் | | பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே (67) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
உரை: அன்னச் சேவல் அன்னச் சேவல் - அன்னச் சேவலே அன்னச் சேவலே; ஆடு கொள் வென்றி அடுபோர் அண்ணல் - கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோரண்ணல்; நாடு தலை யளிக்கும் ஒண் முகம் போல - தன்னாட்டைத் தலையளி செய்யும் விளங்கிய முகம் போல; கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் - இரண்டு பங்கும் வந்து பொருந்திய மதியம் அரும்பு நிலா விளங்கும்; மையல் மாலை - தமியோராயினார்க்கு மயக்கத்தைச் செய்யும் மாலைப் பொழுதின் கண்; யாம் கையறுபு இனைய - யாம் செயலற்று வருந்த; குமரியம் பெருந் துறை அயிரை மாந்தி - குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரையை மேய்ந்து; வடமலைப் பெயர்குவை யாயின் - வடதிசைக்கண் இமயமலைக் கண்ணே போகின்றாயாயின்; இடையது சோழ நன்னாட்டுப் படினே - இவ்விரண்டிற்கு மிடையதாகிய நல்ல சோழநாட்டின்கண் சென்று பொருந்தின்; கோழி - உரையூரின்கண்; உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பறையோடு தங்கி; வாயில் விடாது கோயில் புக்கு - வாயில் காவலர்க்கு உணர்த்திவிடாதே தடையின்றிக் கோயிற்கண்ணே புக்கு; எம் பெருங் கோக் கிள்ளி கேட்க - எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்ப; இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே - பெரிய பிசி ரென்னும் ஊரின்கண் ஆந்தையுடைய அடிக்கீழென்று சொல்லின்; மாண்ட நின் இன்புறு பேடை அணிய - மாட்சிமையுடைய நினது இன்புறும் பேடை பூண; தன் நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கு - தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை அளிப்பன் நினக்கு எ-று.
ஆடுகொள் வென்றி யென்பதற்கு, வென்றி மிக்க வென்றி யெனினுமமையும். குறும் பறை யென்றது? பேடையை, வாயில் விடா தென்றதற்கு வாயில் காவல் விடவேண்டா தெனினு மமையும். முகிழ் நிலா வென்பது ஒரு சொன்னடைத்தாய் மதியம் முகிழ் நிலா விளங்கு மென
|