பக்கம் எண் :

173

முதல்வினை கொண்டது; மதியம் முகிழ்க்கும் நிலா வெனினு மமையும்
ஆந்தை யடியுறை யென்பதற்கு. ஆந்தை, நின் அடிக்கண் உறைவானென்
பாரு முளர். கேடை யணிய நன்கலம் நல்குவ னென்றதனாற் பயன், மறவாது
போதல் வேண்டும் என்னும் நினைவாயிற்று.

     விளக்கம்: ஆடு கொள் வென்றிக்கு இடமும் ஏதுவுமாகலின்,
“அடுபோர் அண்ணல்” என்றார். அடு போர் அண்ணல் பகைவரை
வஞ்சியாது கொல்கின்ற போரையுடைய, இம் மாலைப்போது வருத்தத்தால்
மயக்க முறுவிக்குமாகலின், “மையல் மாலை” யெனப்பட்டது. மாலைப்போதில்
வெயிலொளி குன்ற இருள் விரவுதலின், மையல் மாலை யெனப்பட்ட
தென்றுமாம். வடமலை, இமயமலை. திருவேங்கடமும் விந்தமும் வடமலை
யெனப்படுமாயினும், அவை தாமும் வடக்கே பிறமலைகளை யுடைமையின்,
அவ்வாறில்லாத இமயமே ஈண்டுக் கொள்ளப்படுவதாயிற்று. இவற்றின்
கண்ணுள்ள நீர்நிலை ஒருகால் நீர் வற்றுமாயினும், இமயத்து நீர்நிலை என்றும்
வற்றாமையின், அது நோக்கி அன்னச் சேவல் செல்வதாகக் கருதுகின்றார்.
குறும் பறை - இளமை பொருந்திய பெடை யன்னம். குறுமை, இளமை
குறித்துநின்றது; குறு மகள் என்றாற்போல, பறத்தலை யுடையது பறை.
வாழ்க்கைத் துணையாகிய பெடை தனக்குரிய பெண்மைக் குணத்தால்
மாட்சிமைப் படுவதையே இவர் பெரிதும் விரும்புவராதலால்,“மாண்ட நின்
பெடை” என்றார். பிறாண்டு தம் மனைவியை, “மாண்டவென் மனைவி”
யென்பர். அடியுறை யென்னற்குரியது அன்னமாதலின், அதற்கேற்ப
“அடிக்கீழ்” என்றார். “அடியுறை யெனின் வறிது செல்வாயல்லை; நின்
இன்புறு பேடை அணிய நன்கலம் நல்குவன்” என்பது கேட்கின் அன்னம்
மறவாது செல்லும் என்பது கருத்து.

68. சோழன் நலங்கிள்ளி

     சோழன் நலங்கிள்ளி உறையூரின்கண் இருக்கையில், கோவூர் கிழார்
சென்று அவனைக் கண்டார். அவன் உயர்ந்த பூண்களை யணிந்து மகளிர்
பால் மென்மையுடையனாய் இனி திருப்பதும், அவன் மெய்-வன்மையால்
வீரராகிய ஆடவர் அவனைப் பணிந் தொழுகுவதும், சோழ நாட்டு
மன்பதைகட்குத் தான் உயிரெனக் கருதிப் பேணுவதும், அவனுடைய மறம்
நீங்கா வீரர் போர்த்தினவு கொண்டு செம்மாப்பதும் நேரிற் கண்டு வியந்தார்.
சோழனும் அவர்க்கு மிக்க பொருளைப் பரிசிலாக வழங்கினான். இச்
செய்தியை இவர் இப்பாட்டின்கண் பாண னொருவதற்குக் கூறும் முறையில்
வைத்துக் கூறுகின்றார்.

உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந்
தீங்கெவன் செய்தியோ பாண பூண்சுமந்
5.தம்பகட் டெழிலிய செம்பொறி யாகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்