பக்கம் எண் :

185

காணாதே; கொடியன் எம் இறை யென - கொடியன் எம்முடைய
வேந்தனென்று கருதி; கண்ணீர் பரப்பி - கண்ணீரைப் பரப்பி; குடி
பழி தூற்றும் கோலே னாகுக - குடிமக்கள் பழி தூற்றும்
கொடுங்கோலை யுடையே னாகுக; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக - உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட
கேள்வியையுடைய மாங்குடிமருதன் முதல்வனாக; உலக மொடு நிலைஇய
- உலகத்தோடு நிலைபெற்ற; பலர் புகழ் சிறப்பின் புலவர் - பலரும்
புகழும் தலைமையையுடைய புலவர்; பாடாது வரைக என் நில வரை -
பாடாது நீங்குக எனது நில வெல்லையை; புரப்போர் புன்கண் கூர -
என்னாற் புரக்கப்படுங் கேளிர் துயரம் மிக; இரப்போர்க்கு ஈயா
இன்மை யான் உற - இரக்குமவர்கட்குக் கொடாத வறுமையை யான்
உற எ-று.

     என் நிழல் வாழ்நராகிய குடியென்க. உளையக் கூறியதனைத் தம்
மிடத்திருந்து கூறியதாகவும், சிறுசொற் சொல்லியதனைப் போர்க்களத்
தெதிர்ப்பட்டுக் கூறியதாகவும் கொள்க. இவனென்றார் தம் கருத்துக்கண்
அணுமையான். அகப்படேனாயினென்றது, ஈண்டுப் பிறவினைமே னின்றது.
வேந்தரைத் தாக்கி அகப்படேனாயின், கோலேனாகுக, இன்மையானுற; என்
நிலவரை புலவர் பாடாது வரைகவென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
“நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்” என்பதனை நாட்டாரால் மீக்கூறப்பட்ட
மந்திரிச் சுற்ற முதலாயினார் நகுதக்கன ரெனப் பிரித்துரைப்பினு மமையும்:
நிலவரைப் புரப்போர் எனவும் பாடம்.

     விளக்கம்: “நெடுஞ்செழியன் நாட்டை மீக்கூறுவோர் அவன்
பகைவராகிய நம்மால் எள்ளி நகைக்கத்தக்கவராவர்; இவன் மிக இளையன்”
எனப் பகைவர் தம்மிடத்திருந்தே கூறிக் கொள்கின்றனர். போர்க்களத்தில்
நேர்பட்டு நின்று “யானையும் தேரும் மாவும் மறவரும் உடையம்” எனத்
தம்மை மிகுத்துச் சொல்லுகின்றனர். படையமை மறவர் என்ற விடத்துப் படை,
படைக்கலத்தொழில் குறித்துநின்றது. அவர்கள் செயற்குரியது என்
உறுதுப்புக்கு அஞ்சுவதாகும்; அது செய்யாது சினஞ் செருக்கி, அது
காரணமாகச் சிறுசொல் சொல்லுகின்றா ரென்பதாம். அகப்படுதல், ஈண்டுப்
பிறவினையாய் அகப்படுத்துதல் என்ற பொருள் தந்து நிற்கிறது. சிறப்பு -
தலைமை இரப்போர்க்குக் கொடாத இன்மையால் இம்மைப் புகழும், புலவர்
பாடாது வரைதலால் மறுமையின்ப வாழ்வும் பெறா தொழிவேனாக என்று
வஞ்சினம் கூறுகின்றான்.