பக்கம் எண் :

216

  மனத்   திட்பமும்   வினைத்  திட்பமுமே திருவாகக் கருதப்படுகின்றன.
பால் போலும் நிறத்தையுடைய  பிறைத்திங்கள்  இறைவன்  முடியில்
நுதல் போல விளங்குதலால், “பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி”
என்றார். பிறை   இறைவன்  நுதற்கண்ணே பொலிய விளங்கும் சென்னி
யென்று  உரைப்பினும்  அமையும்  என்றற்கு, “பிறை நுதல் அமையும்”
என்றார். ஒருவன், இறைவன் பெயர்களுள் ஒன்று; “ஒருவனென்னும்
ஒருவ  போற்றி” எனச்  சான்றோர் கூறியிருத்தல்  காண்க. நீலமணி
மிடற்  றொருவன்  என்ற  விடத்து,  நீலமணி  நிறம்   நஞ்சுண்டமை
நினைப்பித்து, “விண்ணோரமுதுண்டுஞ் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்
சுண்டிருந்தருள’’ச் செய்யும்  சிறப்பைப்  புலப்படுத்துகிறது. இறைவன்
நஞ்சினைத் தானுண்டு   அமுதினை விண்ணோர்க்கு  வழங்கியது
போல,  அதியமானும்   நெல்லிக்கனியே ஒளவைக்கீந்து சிறப்புற்றான்.
தன்னை  நெடிது  வாழப்பண்ண   வேண்டுமெனக் கருதிய அவன்
கருத்தை வியந்த ஒளவையார்,  அவனும்   இறைவன் போன்ற
செய்கையுடையனாயது பற்றி,   அவ்விறைவனே  போல நிலைபெறுதல்,
வேண்டுமென்றெண்ணி, “ஒருவன்   போல  மன்னுக  பெரும
நீயே” என்றார். நெல்லிக்கனியின் அருமை  தோன்றப்   “பெரும  நீயே” 
என்றார்.  நெல்லிக்கனியின் அருமிசை - ஏறுதற்கரிய  உச்சி.   ஆதல் -
நீடிய  உயிர் வாழ்க்கைக்கு ஆக்க மாதல்.  நெல்லிக்கனி  தன்னை
யுண்டார்க்குச் சாதல் உண்டாகாமை   தருவது  தோன்றச்  “சாதல்
நீங்க”என்றார். பிறிதோரிடத்தும், “அதிகா, வன் கூற்றின் நாவை
அறுப்பித்தாய்ஆமலகம் தந்து”(தனிப் பாட்டு) என்பதும் ஈண்டு
நினைவுகூரத் தக்கது.

                   92. அதியமான் நெடுமான் அஞ்சி

         அதியமான்,   தான்  நெடிது உயிர்வாழ்தலினும் ஒளவையார்
நெடிது வாழ்தலால் உலகுயிர்கட்கு  ஆக்கமாகும் என்ற பேரருளால் தான்
பெற்ற நெல்லிக் கனியைத்  தந்தருளியது கண்ட ஒளவையார் மனங்
குழைந்து நாக்குழறித் தாம்  நினைத்தவாறெல்லாம் அவனைப் பாராட்டக்
கருதி, “நெடுமான்  அஞ்சி, நீ என்பால் மிக அருளுதலால் என் சொல்
தந்தையர்க்குத்  தம் புதல்வர் சொல்லும் சொற்போல அருள் சுரக்கும்
தன்மையனவாம்”என்று இப்பாட்டாற் கூறியுள்ளார்.

 யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க்
கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லு மன்ன வொன்னார்
5கடிமதி லரண்பல கடந்த
 நெடுமா னஞ்சிநீ யருளன் மாறே.  (92)

         திணை: அது: துறை: இயன்மொழி. அவனை அவர்
பாடியது.

         உரை: யாழொடுங் கொள்ளா - யாழோசை போல
இன்பமும் செய்யா; பொழுதொடும் புணரா - காலத்தொடும் கூடியிரா;
பொருள் அறிவாரா - பொருளும் அறிய வாரா; ஆயினும்-;
தந்தையர்க்கு அருள் வந்தன