| 97. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறைசெலுத்தற்குரிய வேந்தர்சிலர் அதனைச் செலுத்தாது போர்க்குச் சமைந்திருப்பதை ஒளவையார் அறிந்தார். அவர்கட்கு உண்மை யறிவித்தற்கும், அதுவே வாயிலாக அதியமானைப் பாராட்டுதற்கும் எண்ணி, இப்பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண், நெடுமான் அஞ்சி யேந்திய வாள் போரில் உழந்து உருவிழந்துள்ளது; வேல் மடை கலங்கி நிலை திரிந்துளது; களிறுகள் பகைவர் களிற்றுத் திரளொடு பொருது தொடி கழிந்துள்ளன; குதிரைகள் போர்க்களக் குருதியிற் றோய்ந்து குளம்புகள் மறுப்பட்டுள்ளன; அவன் பகைவர் எறிந்த அம்புகளால் துளையுண்ட கேடயத்தை யேந்தியுள்ளான்;இவற்றால் இவனைப் பகைத்துப் பொரக் கருதியவர் உய்ந்து போதல் இல்லை; ஆதலால், உங்கள் மூதூர் உங்கட்கு உரித்தாகல் வேண்டின், அவனுக்குரிய திறையைச் செலுத்தி யுய்மின்; மறுப்பீராயின், அவன் ஒருகாலும் பொறான்; யான் சொல்லு மிதனைக் கேளீராயின்; உங்களுடைய உரிமை மகளிர் தோளைப் பிரிந்து மடிதல் திண்ணம்; இதனை யறிந்து போர்செய்தற்கு நினைமின் என்று பாடியுள்ளார்.
| போர்க்குரைஇப் புகன்று கழித்தவாள் உடன்றவர்காப் புடைமதிலழித்தலின் ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே வேலே, குறும்படைந்த வரண்கடந்தவர் | 5 | நறுங்கள்ளி னாடுநைத்தலிற் | | சுரைதழீஇய விருங்காழொடு மடைகலங்கி நிலைதிரிந்தனவே களிறே, எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர் குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற் | 10 | பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே | | மாவே, பரந்தொருங்கு மலைந்தமறவர் பொலம்பைந்தார் கெடப்பரிதலிற் களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே அவன்றானும், நிலத்திரைக்குங் கடற்றானைப் | 15 | பொலந்தும்பைக் கழற்பாண்டிற் | | கணைபொருத துளைத்தோ லன்னே ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட் பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர் நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற் | 20 | கிறுக்கல் வேண்டுந் திறையே மருப்பின் | | ஒல்வா னல்லன் வெம்போ ரானெனச் சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற் |
|