பக்கம் எண் :

234

 

ஏமாத்தல். ஆசைப்படுதல்; “காமர் நெஞ்ச மேமாந் துவப்ப”(புறம்.198)
எனப் பிறரும் இப்பொருளில் வழங்குதல் காண்க.
நெஞ்சம்:
அண்மை விளி. வாழ்க அவன் என்பது, வாழ்கவன் என
வந்தது. அருள்புரியுந் தக்கோரை, அவர் அருள் பெற்றோரும் பெற
விழைவோரும் வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்துங்கால், அவர்
திருவடியை வாழ்த்தும் மரபு கருதி, “வாழ்கவன் தாளே”என்றார்.
பிறாண்டும் இவ்வாறே “வாழ்கவன் தாளே”(புறம்.103) என வாழ்த்துதல்
காண்க.

102. பொகுட்டெழினி

     அதியமான் நெடுமானஞ்சியின் மகனான இப் பொகுட்டெழினி
தன் தந்தைக்குத் துணையாக ஆட்சி புரிகையில், ஒளவையார் அவனைக்
காணச் சென்றார். இவன் தன் குடிகட்கு உற்றுழி யுதவும் பேருள்ளமுமு்
நிறைந்த கல்வியறிவு முடையவனாய் விளங்குவது கண்டு, அவர், மிக்க
மகிழ்ச்சியும் வியப்பும் கொண்டு, இப் பாட்டின்கண், “நெடியோய், நாணிறை
மதிபோல் நீ விளங்குதலால், நின் நிழற்கண் வாழ்வார்க்குத் துன்ப
மென்பதில்லையாம்” என்று பாராட்டியுள்ளார்.

 எருதே யிளைய நுகமுண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவலிழியினு மிசையேறினும்
அவண தறியுநர் யாரென வுமணர்
5 கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
 இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாணிறை மதியத் தனையையிருள்
யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே. (102)

     திணை: அது. துறை: இயன்மொழி. அவன் மகன் பொகுட்
டெழினியை அவர் பாடியது.

     உரை: எருது இளைய - எருதுகள் இளைய தாம்; நுகம்
உணரா - நுகம் பூண்டலை யறியா; சகடம் பண்டம் பெரிது
பெய்தன்று - சகடந்தான் பண்டம் பெரியதாக இடப்பட்டது;
அவல் இழியினும் மிசை ஏறினும் - ஆதலால் அது, பள்ளத்தே
யிழியினும் மேட்டிலே யேறினும்; அவணது அறியுநர் யார் என -
அவ்விடத்து வரும் இடையூறறிவார் யார்தான் என்று நினைந்து;
உமணர் - உப்பு வாணிகர்; கீழ் மரத்து யாத்த சேம அச்சன்ன -
அச்சுமரத்தின் கண்ணே யடுத்துக் கட்டப்பட்ட சேம வச்சுப்
போன்ற; இசை விளங்குகவிகை நெடியோய் - புகழ் விளங்கிய
இடக் கவிழ்ந்த கையையுடையஉயர்ந்தோய்; திங்கள் நாள் நிறை
மதியத் தனையை - நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை
யொப்பை; நின் நிழல் வாழ்வோர்க்கு