பக்கம் எண் :

258

 

“வரகின  அவைப்பு மாணரிசி யொடு, கார்வாய்ப் பொழிந்த வீர்வாய்ப்
புற்றத், தீயல்பெய் தட்ட வின்புளி வெஞ்சோறு” (அகம். 394) என்று
சான்றோர் கூறுமாற்றாலும் அறியப்படும். ஈயல் பெய் தடப்படும் புளிச்
சோற்றுக்கு வேண்டப்படும் இன் அளை, ஆட்டின் பழுக்கக் காய்ச்சிய
பாலானாகிய தயிர் என்று ஈண்டுக் காட்டிய அகப்பாட்டு “சிறுதலைத்
துருவின் பழுப்புறு விளைதயிர்” என்று கூறுகிறது.

                        120. வேள் பாரி

     பாரி மகளிரை நல்ல பாதுகாப்புடைய இடத்துக்குக் கொண்டேகும்
கபிலர், பறம்பு நாட்டின் வளத்தைக் கண்டு, இனி இவ் வளஞ்சிறந்த நாடு,
பாரி யிறந்தமையின் காப்பாரின்றிக் கெட்டழியும் போலும் என வருந்திப்
பாடியுள்ளார்.

 வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப்
பூழி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
5 களைகால் கழலிற் றோடொலிபு நந்தி
 மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து
கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவர கரியத்
10தினைகொய்யக் கவ்வை கறுப்ப வவரைக்
 கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக
நிலம்புதைப் பழுனிய மட்டின் றேறல்
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப்
15 பெருந்தோ டாலம் பூசன் மேவர
 வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தன் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலுஞ் சேட்சிமைப் புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
20 ஓடுகழற் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிற னாடே.  (120)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் - வெம்மை
முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்து;