பக்கம் எண் :

257

 

                      119. வேள் பாரி

     பறம்பு நாட்டின் அழிவு கண்டு வருந்தும் கபிலர், முன்பு அது
புளங்கறியும் தினையாகிய புதுவருவாயுமுடையதாய் விளங்கி யிருந்ததும்,
வேள் பாரி, நெடுஞ்சுரத்து நின்ற தனி மரம்போல் இரவலர்க்குப்
பெருவண்மை புரிந்தொழுகியதும் நினைந்து இப் பாட்டின்கண் கையற்றுப்
பாடியுள்ளார்.

 கார்ப்பெய றலைஇய காண்பின் காலைக்
களிற்றுமுக வரியிற் றெறுழ்வீ பூப்பச்
செம்புற் றீயலி னின்னளைப் புளித்து
மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லோ
5நிழலி னீளிடைத் தனிமரம் போலப்
 பணகெழு வேந்தரை யிறந்தும்
இரவலர்க் கீயும் வள்ளியோ னாடே.
 (119)

     திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.

     உரை: கார்ப்பெயல் தலைஇய - கார்காலத்து மழை பெய்து
மாறிய; காண்பு இன் காலை - காட்சியினிய காலத்து; களிற்று
முகவரியின் - களிற்று முகத்தின்கண் புகர் போல; தெறுழ் வீ
பூப்ப - தெறுழினது மலர் பூப்ப; செம் புற்று ஈயலின் -
செம்புற்றின்கண் ஈயலை; இன் அளைப் புளித்து - இனிய மோரோடு
கூட்டி அடப்பட்ட புளிங்கறியை யுடைத்து; மென்றினை யாணர்த்து -
மெல்லிய தினையாகிய புதுவருவாயை யுடைத்து முன்பு; நந்துங் கொல்
- இனி அது கெடுங்கொல்லோ; நிழலில் நீளிடைத் தனி மரம் போல
- நிழலில்லாத நெடிய வழிக்கண் நின்ற தனிமரத்தை யொப்ப; பணை
கெழு வேந்தரை இறந்தும் - முரசையுடைய அரசரின் மிகுத்தும்;
இரவலர்க் கீயும் வள்ளி யோன் நாடு - இரவலர்க்கு வழங்கும்
வண்மையை யுடையவனது நாடு எ-று.

     பூப்ப வென்னும் வினையெச்சம் இன்னளைப் புளித்தென்னும்
குறிப்பொடு முடிந்தது. வள்ளியோன் நாடு இன்னளைப் புளித்து; யாணர்த்து;
அது நந்துங் கொல்லோ வெனக் கூட்டுக. தெறு ழென்றது, காட்டகத்த
தொரு கொடி; புளிமா வென் றுரைப்பரு முளர்.

     விளக்கம்:நீரின்மையான் வாடி வதங்கிப் பொலிவழிந்திருக்குங்
கானம், கார்ப்பெயல் பெய்தவிடத்து, தழைத்துப் பூத்து வண்டினம் பாட,
வரி நுணல் கறங்க, தெள்ளறல் பருகிய மானினம் துள்ளி விளையாடக்
காண்பார்க்கு இனிய காட்சி வழங்குதலின், “கார்ப்பெயல் தலை இய
காண்பின் காலை” யென்றார். பிறரும், “பாம்பளைச் செறிய முழங்கி
வலனேர்பு, வான்றளி பொழிந்த காண்பின் காலை” (நற். 264) என்பது
காண்க. புளிச் சோற்றை ஈயல் பெய்து அடும் பண்டையோர் மரபு,