| 126. மலையமான் திருமுடிக்காரி
மலையமான் கபிலர் பாடும் புகழ் பெற்று இனிதிருக்கையில் மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண்டற்கு வந்து, அவனுடைய முன்னோர் பகைவரை வென்று அவர் யானைகட்கிட்ட ஓடைப் பொன்னால் பொற்றாமரை செய்து தம்பால் வந்த பாணர்க்கு வழங்கினரென்றும், திருமுடிக்காரியின் புகழனைத்தையும் எஞ்சாமல் இனிய பாட்டில் வைத்துக் கபிலர் பாடியுள்ளாரென்றும், மேலைக்கடலில் சேரமன்னர் கலஞ்செலுத்தி வாணிகம் செய்யத் தொடங்கியபின் வேற்றோர் எவரும் கலஞ்செலுத்துதற் கஞ்சுவாராயின ரென்றும் குறிப்பிட்டு, பெண்ணையாறு பாயும் நாடுடைய வேந்தே, முள்ளூர்க்குத் தலைவ, நின் குடிப்பெருமையும் நின் புகழும் யாம் கூறவல்லேமல்லேம். ஆயினும், இயன்ற அலவிற் கூறுவேம்; அன்றியும்; சேரர் காலஞ்சென்ற குடகடலில் பிறருடைய கலஞ் செல்லமாட்டாதது போலக் கபிலர் பாடியபின், எம்போல்வார் பாடல் செல்லாது; எனினும், எம்மை இன்மையானது துரப்ப நின் வள்ளன்மை முன்னின்று ஈர்ப்ப வந்து சில பாடுவே மாயினம் என்று பாடியுள்ளார்.
| ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை யுரவோன் மருக | 5 | வல்லே மல்லே மாயினும் வல்லே | | நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல் துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற் பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய | 10 | நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம் | | புலனழுக் கற்ற வந்த ணாளன் இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு சினமிகு தானை வானவன் குடகடற் | 15 | பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப் | | பிறர்கலஞ் செல்கலா தனையே மத்தை இன்மை துரப்ப விசைதர வந்துநின் வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற் றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப | 20 | அண்ணல் யானையொடு வேந்துகளத் தொழிய | | அருஞ்சமத் ததையத் தாக்கி நன்றும் |
|