| நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே. (126) |
திணை : பாடாண்டிணை. துறை : பரிசிற்றுறை. மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை : ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு - பகைவருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக்கொண்டு; பாணர் சென்னி பொலியத் தைஇ - பாணரது தலை பொலியும்படி செய்து; வாடாத் தாமரை சூட்டிய - வாடாத பொற்றாமரையைச் சூட்டிய; விழுச்சீர் ஓடாப் பூட்கை உரவோன் மருக - சிறந்த தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையுமுடைய பெரியோன் மரபினுள்ளாய்; வல்லே மல்லே மாயினும் - ஒன்றைக் கற்றறியேமாயினும்; அறிவேமாயினும்; வல்லே நின்வயின் கிளக்குவ மாயின் - விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின்; கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின் - இராப்பொழுது தான் ஓரிடத்தே யுறங்குவது போன்ற செறிந்த இருளையுடைய சிறு காட்டையும்; பறை இசை அருவி - பறை யொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய; முள்ளூர்ப் பொருந - முள்ளூர்க்கு வேந்தே; தெற லரும் மரபின்நின் கிளையொடும் பொலிய - அழித்தற்கரிய தன்மையையுடைய நின் சுற்றத்துடனே பெருக; நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் - நிலத்தின்மேல் மிக்க மாந்தரெல்லாரினும்; புலன் அழுக்கற்ற அந்தணாளன் - அறிவின்கண் மாசற்ற அந்தணாளனாகிய கபிலன்; இரந்துசெல் மாக்கட்கு - இரந்து செல்லும் புலவர்க்கு; இனி இடன் இன்றி - இனிப் புகழ்தற்கு இடனில்லையாக; பரந்து இசை நிற்கப் பாடினன் - பரந்து புகழ் நிற்பப் பாடினான்; அதற்கொண்டு - அதனைக் கொண்டு; சினமிகு தானை வானவன் - சினமிக்க சேனையையுடைய சேரன்; குட கடல் பொலம் தரு நாவாய் ஒட்டிய அவ்வழி - மேல்கடலின்கண் பொன்னைத் தரும் நாவாய் செலுத்திய அவ்விடத்து; பிரர் கலம் செல்கலா தனையேம் - வேறு சிலர் மரக்கலம் போக மாட்டாத அத்தன்மையை யுடையேமாயும்; இன்மை துரப்ப - எமது மிடி துரக்க; இசைதர வந்து - நின் புகழ் கொடுவர வந்து; நின் வண்மையில் தொடுத்தனம் யாம் - நினது வண்மையிலே சில சொல்லத் தொடுத்தனம் யாங்கள்; முள் எயிற்று அரவு எறி உருமின் முரசு எழுந்தொலிப்ப - முட்போலும் பல்லினையுடைய பாம்பை யெறியும் இடியேறு போல முரசு கிளர்ந் தொலிப்ப; அண்ணல் யானையொடு - தலைமையையுடைய யானையுடனே; வேந்து களத் தொழிய - அரசு போர்க்களத்தின்கட்பட; அருஞ் சமம் ததையைத் தாக்கி - பொறுத்தற்கரிய பூசலைச் சிதற வெட்டி; நன்றும் நண்ணாத் தெவ்வர்த்தாங்கும் - பெரிதும் பொருந்தாத பகைவரைத் தடுக்கும்; |