| | கார்வா னின்னுறை தமியள் கேளா நெருந லொருசிறைப் புலம்புகொண் டுறையும் | 5 | அரிமதர் மழைக்க ணம்மா வரிவை | | மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல வின்று பெயரின் அதுமனெம் பரிசி லாவியர் கோவே. (147) |
திணையுந் துறையு மவை. அவள் காரணமாக அவனைப் பெருங் குன்றூர்கிழார் பாடியது.
உரை: கன் முறை அருவிப் பன்மலை நீந்தி - கன்முழைக்க ணின்று விழும் அருவியையுடைய பல மலைகளை அரிதிற் கழித்து; சீறி யாழ் செவ்வழி பண்ணி வந்ததை - சிறிய யாழைச் செவ்வழி யென்னும் பண்ணை வாசிக்கும்படியாகப் பண்ணி வாசித்து வந்ததற்கு; கார் வான் இன்னுறை - கார்காலத்து மழையினது இனிய துளி வீழ்கின்ற ஓசையை; தமியள் கேளா - தமியளாகக் கேட்டு; நெருநல் -நேற்று; ஒரு சிறைப் புலம்பு கொண்டுறையும் - ஒருபக்கத்துத் தனிமைகொண்டிருந்த; அரி மதர் மழைக்கண் அம்மா அரிவை -அரிபரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும் அழகிய மாமை நிறத்தினையு முடைய அந்த அரிவையது; நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் - நெய்யாற் றுறக்கப்பட்ட மைபோலும் கரிய மயிரை; மண்ணுறு மணியின் மாசற மண்ணி - ஒப்பிமிடப்பட்ட நீலமணியினும் மாசறக் கழுவி; புது மலர் கஞல - செவ்வி மலர் நெருங்கும் பரிசு; இன்று பெயரின் - இன்று வருவையாயின்; அது மன்- அதுவாகும்; எம் பரிசில் - எம்முடைய பரிசில்; ஆவியர் கோவே - ஆவியருடைய வேந்தே எ-று.
உறை, துளி; என்றது ஆகுபெயரால் துளியி னோசையை. மன்: அசை. சீறி யாழ் செவ்வழி பண்ணி வந்ததற்கு அரிவை கூந்தல் புது மலர் கஞலும்படி, அவள்பால் என்னொடும் வரின் எம் பரிசில் அதுவெனக் கூட்டுக. நெய் பூசுதலோடு பேணுதலைத் துறந்த வெனினுமமையும். செவ்வழி பண்ணி வந்தது, புதுமலர் கஞல வென்று இயைத்துரைப்பாரு முளர்.
விளக்கம்: பேகனுடைய மலைநாடு குன்றுகளாற் சூழப் பட்டிருத்தலின், கன்முழை யருவிப் பன்மலை நீந்தியென்றார். கார்காலத்தில் மகளிர் தம் காதலரைப் பிரிந்திருத்தலை யாற்றாராகலின், கார்வான் இன்னுறை தமியள் கேளாஎன்றார். உறை - மழைத்துளி. இஃது ஆகுபெயராய், அத்துளி வீழுமு் ஓசைமேல் நின்றது. புலம்பு தனிமை. அரிமதர் மழைக்கண் அம்மா அரிவையென்றது, இன்ன சிறப்புடைய அரிவை. தனிமைத்
|