பக்கம் எண் :

313

 

                  150. கண்டீரக் கோப்பெரு நள்ளி

     கண்டீரக் கோப்பெரு நள்ளிபால் பெருநட்புக் கொண்டொழுகிய
சான்றோர் வன்பரணர். இவரைப் பரணரின் வேறுபட வுணர வன்பரண
ரென்றனர் சான்றோர். ஈண்டு நள்ளியைத் தாம் கண்டது கூறுமாறு போல,
வல்விலோரியைச் சுரத்திடத்தே கண்டு இவர் பரிசில் பெற்று மேம்பட்டனர்.
இவர் பாட்டுகள் இலக்கிய நலம் சிறந்தவை. இப் பாட்டின்கண் தாம்
முதன்முதலாக அவனைக் கண்டதும், அவன் தலையளி செய்ததும்
சான்றோர்க் குரைப்பாராய், “வறுமையுற்று வருந்திய யான் இரவலர்
சுற்றத்துடனே புறப்பட்டு நள்ளியினது கண்டீர நாட்டுக்குப் பல கல்லும்
கானமும் கடந்து சென்றேன். ஒருநாள் வழி நடை வருத்த மிகுதியால்
யாங்கள் காட்டிடத்தே ஒரு பலாமரத்தின் அடியில் அமர்ந்திருந்தேம். மான்
கணத்தை வேட்டம் புரிந்து அவற்றின் குருதி தோய்ந்து சிவந்த கழற்காலும்
மணி விளங்கும் சென்னியுமுடைய செல்வத் தோன்ற லொருவன் எம்பால்
போந்து, எம் வருத்த முற்றும் எம் முகநோக்கித் தேர்ந்து கொண்டானாக,
அவனைக் கண்டு எழுந்த என்னைக் கைகவித்திருக்கச்செய்து, தன்னொடு
போந்து காட்டிடத்தே பரந்திருந்த வில்லுடைய இளையர் திரும்பப்
போதருமுன், தன் கையிலிருந்த தீக்கடை கோலால் தீ மூட்டிக் கானிடைக்
கொன்ற விலங்கின் ஊனைக் காய்ச்சி எம்மை யுண்பித்தான். உண்டு
பசிதீர்ந்த யாங்கள், மலைச்சாரலில் ஒழுகிய அருவிநீரைப் பருகி அயர்வு
நீங்கினேமாக, “எம்பால் வீறு பொருந்திய நன்கலம் வேறில்லை; யாம் காட்டு
நாட்டிடத்தேம்”என்று மொழிந்து தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத்தையும
் முன்கையிலணிந்திருந்த கடகத்தையும் தந்தான்; யாங்கள் அவன்
வள்ளன்மையை வியந்து, “ஐய, நீவிர் யார்? நும்முடைய நாடு யாது?”என
வினவினேம்; அவன் ஒருமொழியேனும் விடையாக மொழியாது எம்பால்
விடைபெற்றுச் சென்றான். பின்னர், யாங்கள் வழியில் பிறமக்கள் தம்முட்
பேசிக்கொண்ட சொற்களால், இவ்வாறு அருள்செய்த வள்ளல்,
தோட்டிமலைக்குரிய கன்மலைநாடனான கண்டீரக் கோப் பெருநள்ளி
யெனத்  தெரிந்து தெளிந்தேம்”என்று கூறியுள்ளார்.

 கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கன்ன
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
தன்னு முள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி
5மான்கணந் தொலைச்சிய குருதியங் கழற்கால்
 வான்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச்
செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன்
தொழுதனெ னெழுவேற் கைகவித் திரீஇ
இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை
10கானதர் மயங்கிய விளையர் வல்லே
 தாம்வந் தெய்தா வளவை யொய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின்