பக்கம் எண் :

314

 
 இரும்பே ரொக்கலோடு தின்மெனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீ்ங்கி
15நன்மர னளிய நறுந்தண் சாரற்
 கன்மிசை யருவி தண்ணெனப் பருகி
விடுத்த றொடங்கினே னாக வல்லே
பெறுதற் கரிய வீறுசா னன்கலம்
பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டேமென
20மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம்
 மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன்
எந்நா டோவென நாடுஞ் சொல்லான்
யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான்
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே
25இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த்தோட்டி
 அம்மலை காக்கு மணிநெடுங் குன்றிற்
பளிங்குவகுத் தன்ன தீநீர்
நளிமலை நாட னள்ளியவ னெனவே.       (150)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகன்ன -
கூதிர்காலத்துப் பருந்தினது கரிய சிறகை யொத்த; பாறிய சிதாரேன்
- துணியாகிய சீரையை யுடையேனாய்; பலவு முதல் பொருந்தி -
பலாவடியைப் பொருந்தி; தன்னும் உள்ளேன் - தன்னையும்
நினையேனாய்; பிறிது புலம் படர்ந்த - வேற்றுநாட்டின்கட் சென்ற;
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி - எனது ஓய்ந்த
செலவானுளதாகிய வருத்தத்தினையும் மிடியையும் பார்த்து; மான்
கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால் - மானினது திரளைத்
தொலைத்த குருதி தோய்ந்த அழகிய வீரக்கழலினையுடைய
காலினையும்; வான் கதிர்த் திருமணி விளங்கும் சென்னி - வாலிய
ஒளியையுடைய அழகிய நீலமணி விளங்கும் உச்சியையுமுடைய;
செல்வத் தோன்றல் - செல்வத்தையுடைய தலைவனாகிய; ஓர்
வல்வில் வேட்டுவன் - ஒரு வலிய வில்லினையுடைய வேட்டுவன்;
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ - தன்னை யஞ்சலி
பண்ணினேனா யெழுந்திருப்பேனைக் கைகவித்திருத்தி; இழுதின்
அன்ன வால் நிணக் கொழுங் குறை - நெய்யிழுதுபோன்ற வெள்ளிய
நிணத்தையுடைய கொழுவிய தடியை; கானதர் மயங்கிய இளையர் -
காட்டுவழியின்கண் வழிமயங்கிப் போகிய இளையர்; தாம் வல்லே
வந்தெய்தா அளவை - தாம் விரைய வந்து பொருந்துவதற்கு
முன்னே;