| உருகெழு ஞாயிற் றொண்கதிர் மிசைந்த முளிபுற் கானங் குழைப்பக் கல்லென அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்குப் பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை |
5 | அவிழ்புகு வறியா தாகலின் வாடிய |
| நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்ணெனக் குய்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில் மதிசேர் நாண்மீன் போல நவின்ற சிறுபொ னன்கலஞ் சுற்ற விரீஇக் |
10 | கேடின் றாக பாடுநர் கடும்பென |
| அரிதுபெறு பொலங்கல மெளிதினின் வீசி நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் மட்டோர் மறுகின் முதிரத் தோனே செல்குவை யாயி னல்குவன் பெரிதெனப் |
15 | பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந் |
| துள்ளந் துரப்ப வந்தனெ னெள்ளுற் றில்லுணாத் துறத்தலி னின்மறந் துறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் |
20 | கூழுஞ் சோறுங் கடைஇ யூழின் |
| உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும் நொந்தன ளாகி நுந்தையை யுள்ளிப் பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும் |
25 | வினவ லானா ளாகி நனவின் |
| அல்ல லுழப்போண் மல்லல் சிறப்பச் செல்லாச் செல்வ மிகுத்தனை வல்லே விடுதல் வேண்டுவ லத்தை படுதிரை நீர்சூழ் நிலவரை யுயரநின் |
30 | சீர்கெழு விழுப்புக ழேத்துகம் பலவே. (160) |