பக்கம் எண் :

345

 

வல்லினும் வல்லே னாயினும் வல்லே
என்னளந் தறிந்தனை நோக்காது சிறந்த
25நின்னிளந் தறிமதி பெரும வென்றும்

வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட வேந்தெழி லகலம்
மாணிழை மகளிர் புல்லுதொறும் புகல
நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பினின்
30தாணிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப
வாளம ருழந்தநின் றானையும்
சீர்மிகு செல்வமு மேத்துகம் பலவே.  
(161)
 

திணை: அது. துறை: பரிசிற்றுறை. அவனை அவர் பாடியது.

உரை: நீண்டொலி அழுவம் குறைபட முகந்து கொண்டு -
பெரிதாய் ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல் குறை பட நீரை
முகந்துகொண்டு; ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ -
விரைந்த செலவையுடைய முகில்கள் வேண்டிய விடத்தே திரண்டு;
பெருமலை யன்ன தோன்றல - பெரிய மலைபோலுந் தோற்றத்தை
யுடையவாய்; சூல் முதிர்பு - சூல் முதிர்ந்து; உரும் உரறு கருவி
யொடு பெயல் கடன் இறுத்து - உருமேறிடிக்கும் மின் முதலாகிய
தொகுதியுடனே கூடிப் பெயலை முறையாகப் பெய்து; வள மழை
மாறிய என்றூழ்க் காலை - வளத்தைத் தரும் மழை நீங்கிய
கோடைக்காலத்து; மன்பதை யெல்லாம் சென்றுண - உயிர்ப்பன்மைக
ளெல்லாம் சென்று நீருண்டற்கு; கங்கை கரைபொரு மலி நீர் நிறைந்து
தோன்றி யாங்கு - கங்கையினது கரையைப் பொரும் மிக்க
வெள்ளம் நிறைந்து தோன்றியவாறு போல; எமக்கும் பிறர்க்கும்
செம்மலை யாகலின் - எங்கட்கும் பிறர்க்கும் தலைமையுடைய
யாதலின்; அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவர - யாவரோடும்
உறவில்லாத ஆறலை கள்வர் கொன்று வழியிலே அடித்துப்
பறித்தலால்; சென்று தலைவருந அல்ல - போய் முடிவனவல்ல;
அன்பின்று வன்கலை தெவிட்டும் அருஞ் சுரம் இறந்தோர்க்கு -
அருஞ் சுரமாயிருக்கத் தம்முயிர்மேல் அன்பின்றி வலிய
கலைகிடந்து அசையிடும் போதற்கரிய அச் சுரத்தின் கண்ணே
அளவின்றிப் பிரிந்தவர்க்கு; இற்றை நாளொடும் யாண்டு தலைப்
பெயர என -இற்றை நாளொடுங் கூடி யாண்டு கழிக வெனச்
சொல்லி; கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து -
கண்ணொளி மழுங்கிய இரக்கத்துடனே வலி கெட்டு;அருந் துயர்
உழக்கும் என் பெருந் துன்புறுவி - பொறுத்தற்கரிய துன்பமுறும்
எனது பெரிய வறுமை யுறுவோள்; நின் தாள் படு செல்வம்
காண்டொறும் மருள - நினது முயற்சியாலுண்டாகிய செல்வத்தைக்
காணுந்தோறும் வியப்ப;