பக்கம் எண் :

344

 

                          161. குமணன்

     பெருஞ்சித்திரனார் குமணனிடத்தில் இருக்கையில், அவர் நெஞ்சம்
அடிக்கடி தன் மனைவி மக்கள் எய்தி வருந்தும் வறுமை நிலையை
யெண்ணி யெண்ணி வருந்துவதாயிற்று.   இவரது  மனநிலையை யறிந்ததும்,
குமணனும்   அவர்க்குப் பெருஞ்செல்வம் தந்து  சிறப்பிக்க  எண்ணினான்.
பெருஞ்சித்திரனார் அவன் திருமுன் சென்று, “வேந்தே, யான் மலைபோலும்
யானை  யூர்ந்து  என்னுடைய  ஊர்க்குச்   செல்ல  விரும்புகின்றேன்;
யானைமேலேறிச் செம்மாந்து போதரும் என் செல்வ நிலையை என்
மனைக்கண்ணிருந்து பெருந்துன்ப முழக்கும் என் மனையாட்டி கண்டு
வியக்க வேண்டும்; அதற்கேற்ற செல்வம் தருவாயாக. அதனைப்
பெறுதற்குரிய தகுதி என்பால் உளதாயினும் இலதாயினும் நீ என் தகுதி
நோக்காது, நின் தகுதி நோக்கி அதற்கேற்ப வழங்குக. யான் கொடாத
பிறவேந்தர் நாணச் செல்லும் கருத்துடையேன்; என் வேண்டுகோளை
ஏற்றருள்க”என இப் பாட்டால் வேண்டி, அவன் மிக்க செல்வத்தோடு
பகடொன்று கொடுக்கப்பெற்றுச் செல்கின்றார்.

 நீண்டொலி யழுவங் குறைபட முகந்துகொண்
டீண்டுசெலற் கொண்மூ வேண்டுவயிற் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூன்முதிர்
புருமுரறு கருவியொடு பெயல்கட னிறுத்து
5 வளமழை மாறிய வென்றூழ்க் காலை
 மன்பதை யெல்லாஞ் சென்றுணக் கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்
கெமக்கும் பிறர்க்குஞ் செம்மலை யாகலின்
அன்பி லாடவர் கொன்றாறு கவரச்
10சென்றுதலை வருந வல்ல வன்பின்று
 வன்கலை தெவிட்டு மருஞ்சுர மிறந்தோர்க்
கிற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரவெனக்
கண்பொறி போகிய கசிவொ டுரனழிந்
தருந்துய ருழக்குமென் பெருந்துன் புறுவிநின்
15தாள்படு செல்வங் காண்டொறு மருளப்
 பனைமரு டடக்கையொடு முத்துப்பட முற்றிய
உயர்மருப் பேந்திய வரைமரு ணோன்பக
டொளிதிக ழோடை பொலிய மருங்கிற்
படுமணி யிரட்ட வேறிச் செம்மாந்து
20செலனசைஇ யுற்றனென் விறன்மிகு குருசில்
 இன்மை துரப்ப விரைதர வந்துநின்
வண்மையிற் றொடுத்தவென் னயந்தனை கேண்மதி