| | தாடாழ் படுமணி யிரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடி னல்லிசை வயமான் றோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே | 10 | பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் | | நாடிழந் ததனினு நனியின் னாதென வாடந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் ஆடுமலி யுவகையொடு வருவல் | 15 | ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. (165) |
திணை: அது. துறை: பரிசில் விடை. தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து இளங்குமணற்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
உரை: மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் - எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக் கருதினோர்; தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர் - தம்முடைய புகழைப் பூமியிடத்தே நிறுத்தித் தாங்கள் இறந்தார்கள்; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் - நணுகுதற்கரிய தலைமையையுடைய மிக்க செல்வர்; இன்மையின் இரப்போர்க்கு ஈயாமையின் வறுமையால் இரப்போர்க்குக்கொடாமையின்; தொன்மை மாக்களின் தொடர்பு அறியலர் - பழைய வண்மையையுடைய மாக்கள் போல் பின்னும் தம் பெயரை நிறுத்தி உலகோடு தொடர்ந்து போதுதலை யறியார்; தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் ஆடியல் யானை - தாளின்கண் தாழ்ந்த ஓசையையுடைய மணி ஒன்றற்கொன்று மாறி யொலிக்கும் புகர் நுதலையுடைய வென்றியியன்ற யானையை; பாடுநர்க்கு அருகா - பாவலர்க்கு மிகக்கொடுக்கும்; கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனெனாக - அழிவில்லாத நல்ல புகழையுடைய வலிய குதிரையையுடைய தலைவனைப் பாடி நின்றேனாக; கொன்னே - பயனின்றியே; பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் - பெருமை பெற்ற பரிசிலன் வாடினனாகப் பெயர்தல்; என் நாடு இழந்ததனினும் மிக இன்னாது என நினைந்து; வாள் தந்தனன் - தலை எனக்கீய வாளைத் தந்தான் தனது தலையை எனக்குத் தருவானாக; தன்னில் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் - ஆங்குத் தருதற்குத் தன்னிற் சிறந்த பொருள் வேறொன்றில் லாமையின்; ஆடு மலி உவகையொடு வருவல் - வென்றி மிக்க உவகையான் வந்தேன்; |