பக்கம் எண் :

44

    

தந்து சிறப்பித்தான். அவரும்  “அடல் வெங்குருசில் மன்னிய  நெடிதே”
யென வாழ்த்தி மகிழ்ந்தார். இவன்  பெயர்,  “இராச   சூயம்   வேட்ட
பெருநற்கிள்ளி” யெனப்படுவது நோக்கின், இவன் இராச சூயம் என்னும்
வேள்வி செய்தவனென்பது தெரிகிறது.  பாண்டரங் கண்ணனார் என்னும்
சான்றோர்  இவன்  தன்  பகைவர்  நாட்டை யழித்த செய்தியைப் பாடிச்
சிறப்பிக்கின்றார்.பாண்டரங்கன் என்பார்க்கு மகனாதலால் இவர் பாண்டரங்
கண்ணனார்   எனப்பட்டார்.   கண்ணனாரென்பது  இவர  தியற்பெயர்.

இப்பாட்டின்கண்,  இவர்  இப்பெருநற்கிள்ளியை  நோக்கி,  “முருகன்
போலும் குருசில், நீ பகைவர் நாட்டுட் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது
விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது; இவ்வாறு
தீயிட்டுக்    கொளுத்திய     அந்நாடு    “கரும்பல்லது    காடறியாப் 
பெருந்தண்பணை” பொருந்திய நன்னாடாகும் ஆயினும் நீ எரி யூட்டுவான்
செய்த போரின்கண் நின் களிறுகளும் நின் கருத்தொப்பப்போர் மலைந்தன“
என்று கூறுகின்றார்.

 வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின் தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
வினைவயல் கவர்பூட்டி
 5. மனைமரம் விறகாகக்
 கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத்
 10.துணைவேண்டாச் செருவென்றிப்
 புலவிவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
 15.கரும்பல்லது காடறியாப்
  பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே. (16)

     திணை: வஞ்சி;  துறை: மழபுலவஞ்சி.  சோழன்  இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.

உரை: வினை மாட்சிய   விரை  புரவியொடு  -  போரிற்கு நன்மையை
யுடையவாகிய விரைந்த குதிரையுடனே; மழை உருவின தோல் பரப்பி
-