பக்கம் எண் :

49

    

பொறுத்தற்கரிய வலியால்  பகையை  மதியாது;  நீ  பட்ட  பெருந்
தளர்ச்சி - நீயுற்ற பெரிய தளர்ச்சி நீங்க;பிறிது சென்று - பிறிதொரு
சூழ்ச்சியாற் போய்; பலர் உவப்ப - பலரும் மகிழ; மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின் - பரந்த உரிமையையுடைய இடத்தின்
நின் சுற்றத்தார் பலர்க்கு நடுவே  உயர்த்துச்   சொல்லப்படுதலால்;
உண்டு ஆகிய உயர் மண்ணும் - நீ செழியனாற் பிணிப்புண்பதற்கு
முன்பு நின்னா லழிக்கப்பட்டுப் பின்பு தம் மரசு வௌவாது  நின்
வரவு பார்த்திருந்த அரசர் நமதாய் இவனாற் கொள்ளப்பட்டு உண்டு
அடிப்பட்டுப் போந்த மேம்பட்ட நிலமும்; சென்று   பட்ட   விழுக்
கலனும் பெறல் கூடும் - இவன்பாற் சென்றுற்ற சீரிய அணிகலமும்
கிடைத்த லுண்டாம்; இவன் நெஞ்சுறப் பெறின் எனவும் - இவனது
நெஞ்சு நமக்கு உரித்தாகப் பெறின் என நினைந்தும்; ஏந்த கொடி
இறைப்புரிசை -நின் வரவு பார்த்திராது தம் மரசு வௌவிய பகைவர்
எடுத்த கொடியையுடைய உயர்ந்த மதிலையும்; வீங்கு சிறைவியல்
அருப்பம் - மிக்க காடும் அகழும் முதலாய காவலையுடைய அகலிய
அரணினையும்; நாம் இனி இழந்து வைகுதும் - நான் இனி இழந்து
தங்குவேம்; உடன்று நோக்கினன் பெரிது எனவும் - இவன் நம்மை
வெகுண்டு பார்த்தான் மிகவென  நினைந்தும்;  வேற்றரசு - பகை
வேந்தர்; பணி தொடங்கும் நின் ஆற்றலொடு புகழேத்தி - ஏவல்
செய்யத் தொடங்குதற்குக் காரணமாகிய நினது வலியுடனே புகழை
வாழ்த்தி; காண்கு வந்திசின் - காண்பேனாக வந்தேன்; பெரும-;
ஈண்டிய மழை யென மருளும் பல் தோல் - திரண்ட முகிலெனக்
கருதி மயங்கும் பல பரிசைப் படையினையும்; மலையெனத் தேன்
இறை கொள்ளும்   இரும்பல்  யானை - மலையென்று கருதித்
தேனினம்  தங்கும் பெரிய பல யானையினையும் உடலுநர் உட்க
வீங்கி - மாறுபடுவோர் அஞ்சும்படி பெருத்தலால்;கடல் என வான்
நீர்க்கு ஊக்கும் தானை - கடலெனக் கருதி மேகம் நீர் முகக்க
மேற்கொள்ளும் படையினையும்; ஆனாது - அமையாது;கடு ஒடுங்கு
எயிற்ற - நஞ்சு சுரக்கும் பல்லினையுடையவாகிய ; அரவுத் தலை
பனிப்ப - பாம்பினது தலைநடுங்கும் பரிசு; இடி யென முழங்கும்
முரசின் - இடியென்று கருத முழங்கும் முரசினையும்;வரையா ஈகை -
எல்லார்க்கும் எப்பொருளும் வரையாது கொடுக்கும்
வண்மையையுமுடைய; குடவர் கோவே - குடநாட்டார் வேந்தே எ-று.

     காவல, பொருந, பெரும, கோவே, ஏத்திக் காண்கு வந்தேன் எனக்
கூட்டி வினைமுடிவுசெய்க. குன்றென்றது சிறு மலைகளை; அன்றி
மணற்குன்றென்று நெய்தல்  நிலமாக்கி,  ஏனை   மூன்றோடுங்  கூட்டி
நானிலத்தோருமென் றுரைப்பாரு முளர். அடுபொருந வென்றது, வேந்தற்கு