| முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன் ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய வுரவோ ரும்பல் |
5. | ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய |
| பெருமைத் தாகநின் னாயு டானே நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப் பூக்கதூஉ மினவாளை நுண்ணாரற் பருவராற் |
10. | குரூஉக்கெடிற்ற குண்டகழி |
| வானுட்கும் வடிநீண்மதில் மல்லன்மூதூர் வயவேந்தே செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி |
15. | ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த |
| நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன் தகுதி கேளினி மிகுதி யாள நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே |
20. | உண்டி முதற்றே யுணவின் பிண்டம் |
| உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரு நிலனும் புணரி யோரீண் டுடம்பு முயிரும் படைத்திசி னோரே வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன் |
25. | வைப்பிற் றாயினு நண்ணி யாளும் |
| இறைவன் றாட்குத வாதே யதனால் அடுபோர்ச் செழிய விகழாது வல்லே நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத் தட்டோ ரம்ம விவட்டட் டோரே |
30. | தள்ளா தோரிவட் டள்ளா தோரே. (18) |