| தோன்றல் என்றார். நிலவரை இறந்தவழி யுள்ளது பாதல வெல்லை யென்பவாகலின், நிலவரை இறந்த என்றதற்கு, நில வெல்லையைக் கடந்த என்றதனோ டமையாது, பாதலத்தே உற ஆழ்ந்த என்றார். புரிசையின் எல்லைக்கு வான் கூறப்பட்டமையின், அகழியின் எல்லையாகப் பாதலம் கூறப்பட்டதென்றுமாம். புரிசை வானத்தின்கண் தோய்ந்தாற் போல்வதற்குக் காரணம் உயர்ச்சியாதலால், உயர்ச்சியால் என்றுரைத்தார். அகழி யென்றதே ஆழ முடைமை யுணர்த்துதலின், வேறு கூறாராயினார். சூட்டு உச்சி. அது விண்மீன் போலத் தோன்றுதல்பற்றி, மீன்பூத் தன்ன உருவ ஞாயில் எனப்பட்டது. குறும்பு - சிற்றரண். பழுக்கக் காய்ச்சிய இரும்பில் நீரைச் சொரியின் அதன்பால் மிக்க வெம்மையுள்ள வரையில் அந்நீர் ஆவியாய் மறைந்து போதலின், அந்நீர் இரும்பால் உண்ணப்பட்ட தென்று கூறுப. இரும்பினிடத்திலிருந்து மீளவும் அது பெறலாகாமையின், இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிது என்றார்; கனலிரும்புண்ட நீரின் விடாது (பெருங். 3.25.71) என்று கொங்குவேளிரும் கூறுதல் காண்க. உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிக் கொண்டமையின், தோற் றோடிய வேங்கை மார்பன், இனி இக் கானப் பேரெயில் இரும்புண் நீரினு மீட்டற் கரிதென நினைத்துக் கூறினான். குழைதல் - தழைத்தல். பாடு துறை - பாடுதற்குரிய புறத்திணைத் துறைகள். இசையொடு மாய்தலாவது, இசையைத் தாங்கும் நாடழிதலால், அதனாற்றாங்கப்படும் புகழும் உடனழிதல். 22. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண், இச்சேரமான் மடிமையின்றி முயல்வதே பொருளாக வுடையன்; அதனால் நாடு சோறு வளம் மிக்கது; செல்வப் படைப்பும் மிகுந்துளது; இவனது காவல் நலம் கண்ட சான்றோர் மாந்தரஞ்சேர லிரும்பொறை யோம்பிய நாடு புத்தே ளுலகத் தற்று என மீக்கூறுகின்றனர்; தன்னைப் பாடிய புலவர் பிறர்பாற் சென்று அவரிசையினைப் பாடாவாறு பெருங்கொடை நல்குவன் என்றும், இத்தகைய சிறப்பைக் கேட்டுத் தாம் வந்து கண்டு மகிழ்வுற்றதாகவும் கூறுகின்றார். | தூங்குகையா னோங்குநடைய உறழ்மணியா னுயர்மருப்பின பிறைநுதலாற் செறனோக்கின பாவடியாற் பணையெருத்தின | 5. | தேன்சிதைந்த வரைபோல | | மிஞிறார்க்குங் கமழ்கடாத் தயறுசோரு மிருஞ்சென்னிய மைந்துமலிந்த மழகளிறு கந்துசேர்பு நிலை இவழங்கப் | 10. | பாஅனின்று கதிர்சோரும் | | வானுறையும் மதிபோலும் | |