| அருங்குறும் புடுத்த கானப் பேரெயில் கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டி இரும்பு ணீரினு மீட்டற் கரிதென வேங்கை மார்ப னிரங்க வைகலும் | 10. | ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர் | | பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே இகழுந ரிசையொடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (21) | திணையும் துறையும் அவை. கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.
உரை: புலவரை யிறந்த புகழ் சால் தோன்றல் - நின்னைப் பாடுவாரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ; நிலவரை இறந்த குண்டு கண் அகழி - நிலவெல்லையைக் கடந்த பாதலத்தே யுற ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும்; வான்தோய் வன்ன புரிசை -உயர்ச்சியால் வானைப் பொருந்துவது போன்ற மதிலையும்; விசும்பின் மீன் பூத் தன்ன உருவ ஞாயில் - அவ்வானிடத்து மீனைப் பூத்தாற்போன்ற வடிவையுடைய சூட்டினையும்; கதிர் நுழை கல்லா மரம் பயில் கடிமிளை - வெயிற்கதிர் நுழையாத மரஞ் செறிந்த காவற்காட்டினையு முடைத்தாய்; அருங் குறும்பு உடுத்த கானப் பேரெயில் - அணைதற்கரிய சிற்றரண்களாற் சூழப்பட்ட கானப்பே ரென்னு மரண்; கருங் கைக் கொல்லன் - வலிய கையையுடைய கொல்லனால்; செந் தீ மாட்டிய - செந் தீயின் கண்ணே மாட்டப்பட்ட; இரும் புண் நீரினும் மீட்டற் கரிது என - இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிதெனக் கருதி; வேங்கை மார்பன் இரங்க - வேங்கை மார்பன் வருந்த; வைகலும்- நாடோறும்; ஆடு கொளக் குழைந்த தும்பை - வென்றி கொளத் தழைத்த தும்பையையுடைய; புலவர் பாடு துறை முற்றிய-புலவர் பாடப்படும் துறைகளை முடித்த; கொற்ற வேந்தே - வெற்றியினையுடைய வேந்தே; இகழுநர் இசையொடு மாய - நின்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே பொன்ற; புகழொடு விளங்கி - வெற்றிப் புகழுடனே விளங்கி; பூக்க நின் வேல் - பொலிவதாக நின் வேல் எ-று.
கானப் பேரெயில் மீட்டற் கரிதென வேங்கை மார்பன் இரங்கப் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே, நின் வேல் பூக்க வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. குழைத்த வென்பது குழைந்த வென மெலிந்து நின்றது. விளக்கம்: உக்கிரப் பெருவழுதியின் புகழ் மிகுதி, புலவரது புலமை யெல்லையைக் கடந்து நிற்பது என்பது தோன்ற, புலவரையிறந்த புகழ்சால்
|