பக்கம் எண் :

64

    

வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம் பொருந்திய பார்வையை
யுடையனவும்; பாவடியால் பணை எருத்தின - பரந்த அடியுடனே
பரிய கழுத்தையுடையனவும்;தேன் சிதைந்த வரைபோல -தேனழிந்த
மலைபோல; மிஞிறார்க்கும் கமழ் கடாத்து - தேனீ யொலிக்கும்
மணநாறும் மதத்துடனே; அயறு சோரும் இருஞ் சென்னிய - புண்
வழலை வடியும் பெரிய தலையை யுடையனவுமாகிய; மைந்து மலிந்த
மழ களிறு - வலிமிக்க இளங்களிறு; கந்து சேர்பு நிலைஇ வழங்க -
கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலே நின்று அசைய;
பாஅல் நின்று கதிர் சோரும் - பக்கத்தே  நின்று  கிரணத்தை
விடுகின்ற;  வான்உறையும்   மதிபோலும்   மாலை  வெண்குடை
நீழலான் -  வானத்தின் கண்ணே தங்கும்   திங்கள்  போலும்
முத்தமாலையையுடைய  வெண்கொற்றக் குடையினது நிழற்கண்ணே;
மருங்கு வாள் இல்லோர் காப்பு உறங்க - தம் பக்கத்து வாள்
இல்லாதோர் அக்குடையே காவலாக உறங்க; அலங்கு செந்நெற்
கதிர்  வேய்ந்த -  அசைந்த  செந்நெற்  கதிரால்  வேயப்பட்ட;
ஆய் கரும்பின் கொடிக் கூரை  -மெல்லிய கரும்பாற் கட்டப்பட்ட
ஒழுங்குபட்ட கூரை;  சாறு   கொண்ட களம்   போல   விழா
எடுத்துக்கொள்ளப் பட்ட இடம் போல;  வேறு வேறு பொலிவு
தோன்ற -   வேறு   வேறாகப்  பொலிந்து  தோன்ற;   குற்று
ஆனா உலக்கையால் - குற்று அமையாத உலக்கை யொலியுடனே;
கலிச் சும்மைவியல் ஆங்கண் - மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற
விடத்து; பொலந்தோட்டுப் பைந் தும்பை - பொன்னாற் செய்யப்பட்ட
இதழையுடைய பசிய தும்பையுடனே; மிசை அலங்கு உளைஇய பனைப்
போழ் செரீஇ- மிசையே அசைந்த தலையினையுடையபனந்தோட்டைச்
செருகி; சினமாந்தர் வெறிக்குரவை -சினத்தையுடைய வீரர்வெறியாடும்
குரவைக் கூத்தொலி; ஓத நீரிற் பெயர்பு பொங்க - ஓதத்தையுடைய
கடலொலி போலக் கிளர்ந்து பொங்க; வாய் காவாது பரந்து பட்ட -
படைப் பெருமையால் பகைவ ருட்கும் மதிப்புடைமையின் இடம்
காவாது பரந்து கிடக்கின்ற; வியன் பாசறைக் காப்பாள - அகன்ற
பாசறையிடத்துக் காவலாள;  வேந்து   தந்த   பணி  திறையால் -
மாற்றரசர் பணிந்து தந்த திறையால்; சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும் -
தம்மை   அடைந்தவருடைய   சுற்றத்தை   நிறைக்கும்;  ஓங்கு
கொல்லியோர் அடு பொருந - உயர்ந்த கொல்லிமலையோருடைய
அடுபொருந; வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய் - யானையினது
நோக்குப்போலும் நோக்கினையுடைய வெற்றியை விரும்பும் சேயே;
வாழிய - வாழ்க; பெரும - பெருமானே; நின் வரம்பில் படைப்பு -
நின்று எல்லையில்லாத செல்வம்; நிற் பாடிய அலங்கு செந்நா -
நின்னைப் பாடிய