| விளங்கிய செவ்விய நா; இசை நுவலாமை - பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல்; ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோபாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எம் கோவே; மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடு - மாந்தரஞ் சேர லிரும்பொறை பாதுகாத்த நாடு; புத்தேளுலகத்து அற்று என - தேவருலகத்தை யொக்கும் என்று பிறர் சொல்ல; கேட்டு வந்து-; இனிது கண்டிசின் - கட்கினிதாகக் கண்டேன்; பெரும - பெருமானே; முனிவிலை - முயற்சி வெறுப்பில்லையாய்; வேறு புலத் திறுக்கும் தானை யொடு - வேற்று நாட்டின்கட் சென்றுவிடும் படையுடனே; சோறு பட நடத்தி - சோறுண்டாக நடப்பை; நீ துஞ்சாய் மாறு - நீ மடியாயாதலான் எ-று.
கதிர் சோரு மதி யென இயையும்; கதிர் சோரு மென்னும் சினை வினை மதி யென்னும் முதலொடு முடிந்தது; கதிர் சோரு, மாலை யென இயைப்பினு மமையும். பாய் நின் றென்று பாடமோதுவாரு முளர். கூரை பொலிவு தோன்ற வென இடத்துநிகழ் பொருளின் றொழில் இடத்து மேலேறி நின்றது. செரீஇ யென்னும் வினையெச்சத்தை ஆடுமென ஒருசொல் வருவித்து அதனோடு முடிக்க நிலைஇ வழங்கக் காப்புறங்கப் பொலிவு தோன்றப் பெயர்பு பொங்க வென்னும் செயவெனெச்சங்களும், வாய் காவா தென்னும் எதிர்மறை வினையெச்சமும் பரந்து பட்ட வென்னும் பெயரெச்ச வினையொடு முடிந்தன.
காப்பாள, பொருந, சேஎய், பெரும, எங்கோ, பெரும, நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை யோம்பிய நாடு புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டு வந்து இனிது கண்டிசின்; நின் படைப்பு வாழிய வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. அன்றி எங்கோவே, நீ துஞ்சாதபடியாலே இரும்பொறை யோம்பிய நாடு புத்தேளுலகத் தற்றெனப் பிறர் சொல்லக் கேட்டு நிற்பாடிய அலங்கு செந்நாப் பிறரிசை நுவலாதபடி வந்து இனிது கண்டேன்; நினது படைப்பொடு வாழ்வாயாக வென இயைப்பினு மமையும்.
இசின்: தன்மைக்கண் வந்தது. சோறுபட நடத்தி யென்பதனை வினையெச்சமாக வுரைப்பினு மமையும். உயர்மருப்பி னென்பதூஉம், செறனோக்கி னென்பதூஉம் பணையெருத்தி னென்பதூஉம் பாடம்.
விளக்கம்: கையான், மணியான், நுதலான், அடியான் என நின்ற ஆனுருபுகள் ஒடு வுருபின் பொருளில் வந்தன. பிறை நுதல் என்ற விடத்து நுதல் மத்தகத்துக் காயிற்று, நடுவிடம் தாழ்ந்து பக்கமிரண்டும் உயர்ந்து பிறை வடிவாகத் தோன்றுதலின், பிறை வடிவாக விடப்பட்ட மத்தகம் என வுரைத்தார். பிறை நுதலாற் செறல் நோக்கின என்னும் இது நுதற்கண்ணால் மூவெயிலைச் செறல் நோக்கின சிவன் செயலைக் குறிப்பாய் நினைப்பிக்கின்றது. அயறு - நீர் கசியும் புண்; இதனைப் புண் வழலை யென்பர். நிலைஇ வழங்க என்றவிடத்து வழங்குதல், நிலைஇ யென்று அடையடுத்தமையால் அசைதலாகலின், நின்ற நிலையிலே அசையஎன்று பொருளுரைத்தார், காப்பு - காப்பாக. கொடி - ஒழுங்கு. வாய் காவாது பரந்து |