பக்கம் எண் :

78

    

பயனென்பதும், நாடகமே யுலகம் என்பது இவருடை புலமைப் பண்பை
நன்கு விளக்குகின்றன.

     இப் பாட்டின்கண், “விழுமிய குடியிற் பிறந்து அரசு வீற்றிருந்தோர்
பலருள்ளும் புலவர் பாடும் புகழ் பெற்றவர் சிலரே; புகழ் பெற்றவர் வலவன்
ஏவா வானவூர்தி யேறி விண்ணுலகு  செல்வர்  என்று  அறிவுடையோர்
சொல்லக்  கேட்டுளேன்; வளர்தலும்   தேய்தலும்   பிறத்தலும் இறத்தலும்
உடையது உலகம்; இவ்வுலகத்தில ் வருந்தி  வந்தோர்க்கு  வேண்டுவன
அருளும் வன்மைதான், வென்றிக்கு மாண்பு; நீ அதனைச் செய்க” என்று
அறிவுறுத்துகின்றார்.

 சேற்றுவளர் தாமரைப் பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
5.உரையும் பாட்டு முடையோர் சிலரே
  மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
10. கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
 தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
15. வல்லா ராயினும் வல்லுந ராயினும்
 வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே. (27)

      திணை : பொதுவியல். துறை: முதுமொழிக்காஞ்சி. சோழன்
நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

     உரை: சேற்று வளர்  தாமரை  பயந்த -    சேற்றின்கண்ணே
வளரும் தாமரை பூத்த; ஒண்  கேழ்  நூற்றிதழ்  அலரின்   நிரை
கண்டன்ன - ஒள்ளிய நிறத்தை யுடைத்தாகிய நூறாகிய இதழையுடைய
மலரினது    நிரையைக்   காண்டாற்போன்ற;   வேற்றுமையில்லாத
விழுத்திணைப் பிறந்து - ஏற்றத் தாழ்வில்லாத  சிறந்த  குடியின்கட்
பிறந்து; வீற்றிருந்தோரை எண்ணுங் காலை - வீற்றிருந்த வேந்தரை
யெண்ணுங் காலத்து; உரையும் பாட்டும்