| நான்மறை முதல்வர் வேந்தரைச் சுற்றியிருத்தல் வேள்வி செய்தற்பொருட்டு இராயசூய முதலிய வேள்விக்கண், நான்மறை முதல்வர் வேந்தர்க்கு மறைவழி காட்டும் சுற்றமாக, ஏனை வேந்தர் வேள்வி வினைக்குத் துணையாக ஏவல் செய்வர். இப்பாண்டியன் வீரரைக் கொண்டு களவேள்வியும். நான்மறையும் முதல்வரைக்கொண்டு ஏனைத் தீ வேள்வியும் செய்தான் என்பதாம். போரிற் பட்டு வீழ்ந்தோர் துறக்கம் புகுவரென்பது நூல் வழக்கு. அதனால் போரிற் பட்ட பகைவர் துறக்கம் புகுதலின் தோற்றவராயினார் என்றார்; நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் (அகம்.61) எனக் கற்ற மகளிர் தம்முட் பேசிக்கொள்ளுதல் காண்க. 27. சோழன் நலங்கிள்ளி இச் சோழ மன்னன் காவிரி பாயும் சோழநாட்டுக் குரியவன்; விம்மிய உள்ளம் படைத்தோர்க்கு அரசுரிமை தகுமேயன்றி உள்ளத்தாற் சிறியவர்க்குப் பொருந்தாதென்னும் கொள்கையுடையவன். இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி யென்றும் கூறுவர். இவனுக்கு உடன்பிறந்தான் ஒருவன் உண்டு; அவன் பெயர், சோழன் மாவளத்தான் என்பது. இவன் காலத்தே சோழநாட்டின் உறையூர்ப் பகுதிக்கு வேந்தாய் உறையூரை இடமாகக்கொண்டு சோழன் நெடுங்கிள்ளி யென்பான் ஆண்டான். அவற்கும் இந் நலங்கிள்ளிக்கும் பகைமையுண்டாயிற்று. அக்காலத்தே, பகைவர் ஈயென விரப்பின் இன்னுயிரும் ஈகுவேன்; அரசுரிமையும் ஒரு பொருளன்று; அவர் அதனை என்னோடு பகைத்துப் பெறக் கருதின் கழை தின்னும் யானையது காலகப்பட்ட முளைபோலக் கெடுத்தொழிப்பேன் என்று இவன் கூறும் வஞ்சினம் இவனது மனமாட்சியைப் புலப்படுக்கும் ஒருகால் நெடுங்கிள்ளி ஆவூரிலிருந்த காலத்து, இவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு வருத்தினான்; அவன் பின் உறையூர்க்குச் சென்று தங்கினானாக, நலங்கிள்ளி உறையூரைத் தான் முற்றுகையிட்டுக் கொண்டான்.கோவூர்கிழார் என்னும் சான்றோர் தகுவன கூறி இருவர்க்கும் சந்து செய்தார். பின்பு நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரித்தாகக் கொண்டு, தனது வரையா ஈகையால் புகழ் மேம்பட்டான்; அக்காலத்தே பாண்டிநாட்டிற் சிறப்புற்றிருந்த மலை அரண்கள் ஏழினை யெறிந்து, அவற்றிடத்தே தன் புலிப்பொறியை வைத்தான்.இவனது வென்றி கிழக்கே கீழ்க்கடலும் மேற்கே குடகடலுமாகிய இரண்டிற்கும் இடையே பரந்து மேலோங்கக் கண்ட வடநாட்டரசர், தங்கள் நாடு நோக்கி இச்சோழன் வருவானோ என நடுங்கித் துஞ்சாக்கண்ணராயினர். இவனைக் கோவூர்கிழார், ஆலத்தூர் கிழார் என்ற இருவரும் பாடியுள்ளனர். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இது முதல் நான்கு பாட்டுக்களால் இவனது சிறப்பியல்பை எடுத்தோதுகின்றார்.
இந்த ஆசிரியரும் உறையூரைச் சேர்ந்தவர். முதுகண்ணன் என்பது இவர் தந்தை பெயர். புலவர் பாடும் புகழுடையோர் வலவனேவா வானவூர்தியேறித் துறக்கஞ் செல்வரென்பதும், திங்கள் உலகில் உயிர்கள் பிறத்தலும் இறத்தலும் வளர்தலும் தேய்தலும் அறியா மடவோரும் அறியக் காட்டு மென்பதும், அறமும் பொருளும் இன்பமும் செய்தல் அறத்தின்
|