இத்தொடரால் இவரைச் சான்றோர் இரும்பிடர்த் தலையார் என வழங்கலாயினர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. இவர்பால் கரிகாலன் இளமையில் கல்விகற்றுச் சிறப்புற்றானென்று முன்றுறையரையனார் கூறுவர். இப்பாட்டில் இவர் பெரும்பெயர் வழுதியின் குடிப் பிறப்பும் மனைமாண்பும் கொடைப்புகழும் எடுத்தோதிப் பாராட்டி வாழ்த்தி யொழியாது சொற்பெயராமை வேண்டும் என வற்புறுத்தும் திறம், கரிகாலனைப் பேரரசனாக்கும் திறம் இவர்பால் உண்மையினை நாமறியப் புலப்படுத்துகிறது.
உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற ஏம முரசம் இழுமென முழங்க நேமி யுய்த்த நேஎ நெஞ்சின் |
5. | தவிரா ஈகைக் கவுரியர் மருக | | செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ பொன்னோடைப் புகரணிநுதல் துன்னருந்திறல் கமழ்கடாஅத் தெயிறுபடையாக எயிற்கத விடாஅக் |
10. | கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் | | பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி நிலம்பெயரினும் நின்சொற் பெயரல் |
15. | பொலங்கழற்காற் புலர்சாந்தின் | | விலங்ககன்ற வியன்மார்ப ஊரில்ல உயவரிய நீரில்ல நீளிடைய பார்வ லிருக்கைக் கவிகண் ணோக்கிற் |
20. | செந்தொடை பிழையா வன்க ணாடவர் | | அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை நின்னசை வேட்கையின் இரவலர் வருவரது |
25. | நின்னசை வேட்கையின் இரவலர் வருவரது | | இன்மை தீர்த்தல் வன்மை யானே (3) |
திணையும் துறையும் அவை. பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடியது.
|