| இக்காலத்தமிழ்மக்கள் குறிக்கொண்டு போற்றத்தக்கதாகும். உரை புகழ்.இனிப் பரிமேலழகர், உரையாவது எல்லாராலும் புகழப்படுவதென்றும், பாட்டாவது சான்றோர் பாடும் புகழ் என்றும் கொண்டு, புகழ்தான் உரையும் பாட்டு மென இருவகைப்படும். என்பர். உரையும் பாட்டும் பெற்றவர்,பெற்றவுடனேவலவ னேவா வானவூர்தி எய்துப என்பதன்று; செய்தற்குரியநல்வினையைச் செய்து முடித்த பின்பே அவ்வூர்தியில் விசும்பெய்துப என்பார், செய்வினை முடித்து என வேறு வைத்து வற்புறுத்தினார். புலவர்பாடும் புகழ்ப் பயனை இவ்வாறு அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன் என்பது விளங்க என்ப என்றும், எனக் கேட்பல் என்றும் கூறினார்.வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை யெண்ணுங்கால்நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர்சிலர்என இயைத்தல் வேண்டுமென்பது உரைகாரர் கருத்து. இவ்வாறன்றி, நிரைகண் டன்ன விழுத்திணை யென்றும் கிடந்த படியே கொண்டாலும் பொருந்து மென்பதற்காக, நிரை........அமையும் என்றார். அவை யுடையோர் தத்தம் பகைவரை வெல்வர் என்ற விடத்து, அவை யென்றது அருளும் கொடையும் குறித்து நின்றது; அருளும் கொடையு முடையவர் வெல்வ ரென்பதாம்.
28. சோழன் நலங்கிள்ளி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாட்டின்கண், மக்கட் பிறப்பிற் காணப்படும் சிதடு முதுல் மருள் ஈறாகக் கூறப்படும் எண்வகை எச்சங்களும் ஒருவர்க்குப் பிறப்பிற் பொருந்துவது குற்றம். கானத்தை இடமாகக் கொண்டு வாழும் நின் பகைவர் போலாது, கூத்தர் ஆடுகளம்போலும் அகநாட்டை நீ யுடையை யாதலும், நீ பெற்ற செல்வம் அறம் பொரு ளின்பங்களை ஆற்றுதற்காகவே யாகும்;அவற்றை ஆக்காமை மேலே கூறிய குற்றம் பொருந்திய பிறப்புண்டாகப் பண்ணும் என்று சோழன் நலங்கிள்ளிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார். | சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும் கூனுங் குறளு மூமுஞ் செவிடும் மாவு மருளு முளப்பட வாழ்நர்க் கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம் | 5. | பேதைமை யல்ல தூதிய மில்லென | | முன்னு மறிந்தோர் கூறின ரின்னும் அதன்றிற மத்தையா னுரைக்க வந்தது வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம் | 10. | கானத் தோர்நின் றெவ்வர் நீயே | | புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப் | |