| பாட்டுக்கள் மிக்க உருக்கமுடையனவாகும். இவன் இறந்தவிடம் குளமுற்றம் என்னும் ஊர். இதுபற்றியே இவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பிற்காலத் தான்றோரால் குறிக்கப் படுகின்றான்.
ஆலத்தூர் கிழாரின் இயற்பெயர் தெரிந்திலது. ஆலத்தூர் - சோழ நாட்டில் உள்ளதாகிய ஓர் ஊர். இவர், கிள்ளிவளவன் உறையூரிலிருந்தானாக, அவனைக் கண்டு பரிசில் பெற்ற திறத்தைப் பாணாற்றுப் படையால் விளக்கிக் கூறுகின்றார். இத் தொகைநூற்கண் ஐந்து பாட்டுக்கள் உள்ளன.
இப் பாட்டின்கண், இவர் கிள்ளிவளவன்பால் பெருஞ் செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை, அவன் எம்மை நினைத்து மீளவும் வருதிரோ? என்று கேட்க, பாணர்க்குத் தொலையாச் செல்வத்தை வழங்கும் எம் கோனாகிய வளவன் வாழ்க என்று பாடேனாயின், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறநூல் கூறிற் றாதலின், அக்கூற்றுப்படி, யானுறையும் நாட்டில் ஞாயிறு முறைப்படி தோன்றுதலொழியும்; சான்றோர் செய்த நல்வினையால் நாட்டிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகிய காலம் நீ வாழ்வாயாக எனச் சொல்லி வாழ்த்துகின்றார்.
| ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென | 5. | நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் | | செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ காலை யந்தியு மாலை யந்தியும் புறவுக் கருவன்ன புன்புல வரகின் | 10. | பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் | | குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலோ டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக் கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க் | 15. | கலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் | | எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின் பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற் படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச் | 20. | சான்றோர் செய்த நன்றுண் டாயின் |
|