| 201. இருங்கோவேள் இருங்கோவேள் என்பான் பதினெண்குடி வேளிருள் ஒருவன் தமிழகத்தின் வடபகுதியாகிய எருமை (மைசூர்) நாட்டைச்சேர்ந்தது வரையென்னும் நகர்க்கண்ணிருந்து ஆட்சிபுரிந்த வேந்தர்வழியினன். இத் துவரை துவார சமுத்திரம் எனப்படுகிறது. இருங்கோவேள் அவ் வேளிருள் நாற்பத்தொன்பதாவது தலைமுறையினன். புலி கடிமால் என்பது இவன் குடி முதல்வனுக்குப்பெயர். இவ் வேளிர் வள்ளன்மை சிறந்தவர்; போர்வன்மை மிக்கவர். இவர் நாடு புதுக்கோட்டைச் சீமையிலுள்ளமலைநாடு. இவற்றிற்கு மேற்கிலுள்ள கோடைமலைத்தொடர் பொன்படுமால்வரையென (Imp. gazette. Coimbatore) ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். பாரிமகளிரைக் கொணர்ந்த கபிலர் இவனையடைந்து, “இம் மகளிரை யான்தர மணந்து கொள்க” என வேண்டுகின்றவர், “இவர்கள்முல்லைக்குத் தேரீந்து நல்லிசை நிறுவிய பறம்பிற்கோமானாகிய பாரியின் மகளிர்; யான் இவருடைய தந்தையாகிய வேள்பாரிக்குத் தோழன்; அந்தணன் புலவன்” என்று கூறுகின்றார். | இவரியார் என்குவை யாயி னிவரே ஊருட னிரவலர்க் கருளித் தேருடன் முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் | 5 | நெடுமாப் பாரி மகளிர் யானே | | தந்தை தோழ னிவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை | 10 | உவரா வீகைத் துவரை யாண்டு | | நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய | 15 | ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் | | யான்றர விவரைக் கொண்மதி வான்கவித்து |
|