பக்கம் எண் :

2

     
 இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற்
பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
உடலுந ருட்குந் தானைக்
20 கெடலருங் குரைய நாடுகிழ வோயே.

    திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. பாரிமகளிரை
இருங்கோவே ளுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.

    உரை:
இவர் யார்என்குவையாயின் - இவர்யாரென்று
வினவுவாயாயின்; இவர் - இவர்தாம்; ஊருடன் இரவலர்க்கு அருளி
-  ஊரெல்லாவற்றையும்இரப்போர்க்கு  வழங்கி;  தேருடன்
முல்லைக்கீத்த - தேரை ஏறுதற்கேற்பச் சமைத்த அணியோடும்
புரவியோடும்கூட முல்லைக்கு வழங்கிய; செல்லா நல்லிசை -
தொலையாத நல்ல புகழையும்; படுமணி யானை - ஒலிக்கும்
மணியையுடைய யானையையுமுடைய; பறம்பின் கோமான் நெடுமாப்
பாரிமகளிர் - பறம்பிற்குத் தலவனாகிய மிக்க பெரிய பாரியுடைய
மகளிர்; யான் தந்தை தோழன் - யான் இவர் தந்தையின்
தோழனாதலான்; இவர் என் மகளிர் - இவர் என்னுடைய மகளிர்;
அந்தணன்புலவன்கொண்டுவந்தனன் - அந்தணனாகியபுலவன்
யான்கொண்டுவந்தேன்;  நீயே - நீதான்;வடபால்முனிவன்
தடவினுள் தோன்றி - வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தின்கண்
தோன்றி; செம்பு புனைந்தியற்றிய சேண் நெடும் புரிசை - செம்பால்
புனைந்து    செய்தாலொத்த சேய்மையையுடைத்தாகிய நெடிய
மதிலையுடைய; துவரை ஆண்டு - துவராபதி யென்னும் படை
வீட்டையாண்டு; உவரா ஈகை - வெறுப்பில்லாத
கொடையினையுடையராய்;  நாற்பத்தொன்பது வழிமுறை வந்த -
நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த; வேளிருள் வேள் -
வேளிருள்வைத்து வேளாயுள்ளாய்; விறற்போர் அண்ணல் - வென்றிப்
போரையுடைய தலைவ; தாரணி யானைச் சேடு இருங்கோவே -
தாரணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே; ஆண்கடன்
உடைமையின் பாண்கடன் ஆற்றிய - ஆண்டன்மையைக் கடப்பாடாக
வுடைமையால் பாணர்க்குச் செய்யக்கடவ முறைமையை யுதவிய; ஒலியல்
கண்ணிப் புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே;
யான் தர இவரைக் கொண்மதி - யான் நினைக்குத்தர இவரைக்
கொள்வாயாக, வான் கவித்து - வானாற் கவிக்கப்பட்டு; இருங்கடல்
உடுத்த இவ்வையகத்து - பெருங்கடல் சூழ்தரப்பட்ட இவ் வுலகத்தின்
கண்; அருந்திறல் பொன்படு மால் வரைக் கிழவ - அணுகுதற்கரிய
வலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ;
வென்வேல் உடலுநர் உட்கும் தானை - வெற்றிவேலையுடைத்தாகிய
பகைவரஞ்சும்படையையுடைய;கெடலரும்நாடுகிழவோய் -
கேடில்லாத நாட்டுக்குரியவனே; என்றவாறு.

     
உவரா வீகை வேளிர் எனக் கூட்டுக. “வடபால்முனிவன் தடவினுள்
தோன்றி” என்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும். அது கேட்டுணர்க.
புலிடிமால் என்பது இவனுக்கொரு பெயர். வேளே, அண்ணல்,